உவர்நீரில் மீன்வளர்ப்பு முறை தொழில்நுட்ப பயிற்சி முகாம்| Dinamalar

உவர்நீரில் மீன்வளர்ப்பு முறை தொழில்நுட்ப பயிற்சி முகாம்

Added : செப் 19, 2022 | |
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம்காரங்காடு, ரெகுநாதபுரம் ஆகிய இடங்களில் சென்னை மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் சார்பாக, 3 நாட்கள் மீன் வளர்ப்பு முறை குறித்த தொழில்நுட்ப பயிற்சி முகாம் நடந்தது.இதில், மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் முதன்மை விஞ்ஞானி செந்தில்குமார், உவர்நீர் தொட்டிகளில் மீன் விரலிகள் இருப்பு செய்து, நாற்றங்கால்
உவர்நீரில் மீன்வளர்ப்பு முறை தொழில்நுட்ப பயிற்சி முகாம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம்காரங்காடு, ரெகுநாதபுரம் ஆகிய இடங்களில் சென்னை மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் சார்பாக, 3 நாட்கள் மீன் வளர்ப்பு முறை குறித்த தொழில்நுட்ப பயிற்சி முகாம் நடந்தது.



இதில், மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் முதன்மை விஞ்ஞானி செந்தில்குமார், உவர்நீர் தொட்டிகளில் மீன் விரலிகள் இருப்பு செய்து, நாற்றங்கால் முறையில், மீன்வளர்ப்பு செயல்பாடுகள் குறித்தும்,தீவன மேலாண்மை, நோய் தடுப்பு முறை பற்றி விரிவாக கூறினர். மீனவர்களின் சந்தேங்களுக்கு பதிலளித்தார். காரங்காட்டில் ஆற்றில் தொட்டி அமைத்து மீன் குஞ்சுகள் விட்டுள்ளனர். ரெகுநாதபுரத்தில் குளம் அமைக்கும் பணி நடக்கிறது. மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் களப்பணியாளர் தேவநாதன், திட்ட இணை அலுவலர் ஜெயபவித்ரன், ஊராட்சி நிர்வாகிகள், மீனவர்கள் பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X