இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., இல்லை; மகளிர் ஸ்டேஷனில் பணி பாதிப்பு| Dinamalar

இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., இல்லை; மகளிர் ஸ்டேஷனில் பணி பாதிப்பு

Added : செப் 19, 2022 | |
திருவாடானை : திருவாடானை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. இல்லாததால், பணிகள் பாதிக்கப்பட்டு, புகார் மனுதாரர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.திருவாடானை சின்னக்கீரமங்கலத்தில் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்உள்ளது. இங்கு திருவாடானை, தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி, எஸ்.பி.பட்டினம் ஆகிய பகுதிகளில் உள்ள பெண்கள் புகார் அளிக்க

திருவாடானை : திருவாடானை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. இல்லாததால், பணிகள் பாதிக்கப்பட்டு, புகார் மனுதாரர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.



திருவாடானை சின்னக்கீரமங்கலத்தில் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்உள்ளது. இங்கு திருவாடானை, தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி, எஸ்.பி.பட்டினம் ஆகிய பகுதிகளில் உள்ள பெண்கள் புகார் அளிக்க வருகின்றனர்.இந்நிலையில், இங்கு பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் ஜெயபிரிட்டோ மாறுதலாகி சென்றார். அவருக்குபதிலாக வனிதாராணி ஜூலையில் பொறுப்பேற்றார்.



ஆனால் அவர் பதவி ஏற்ற சில நாட்களில் நீண்ட நாள் விடுப்பில் சென்றார்.எஸ்.ஐ., பணியிடமும் ஒரு ஆண்டாக காலியாக உள்ளது. தற்போது திருவாடானை போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சித்ராதேவி கூடுதல் பொறுப்பேற்று விசாரிக்கிறார்.ஒரு ஏட்டு உட்பட 3 போலீசார் மட்டுமே பணியில் உள்ளனர். நிரந்தர இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. இல்லாததால் புகார் கொடுப்பவர்களின் மனு மீது விசாரணை செய்து தீர்வு காண்பதில் சிக்கல் ஏற்பட்டுஉள்ளது. ஆகவே இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., பணியிடங்களை நிரப்ப எஸ்.பி. தங்கதுரை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X