பராமரிப்பில்லாத சுகாதாரப் பூங்கா

Added : செப் 19, 2022 | |
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர்அலுவலக வளாகத்தில் உள்ள சுகாதார பூங்கா வளாகம் பராமரிப்பு இல்லாமல் பாழாகியதால் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதால் சுகாதாரம் கேள்விகுறியாகியுள்ளது.சுகாதார பூங்கா எதிரில் ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகம், மகிளா நீதிமன்றம், மத்திய கூட்டுறவு வங்கி, கரூவூலம், கால்நடைத்துறை, வேளாண்துறை உள்ளிட்ட பல்வேறு
பராமரிப்பில்லாத சுகாதாரப் பூங்கா

ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர்அலுவலக வளாகத்தில் உள்ள சுகாதார பூங்கா வளாகம் பராமரிப்பு இல்லாமல் பாழாகியதால் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதால் சுகாதாரம் கேள்விகுறியாகியுள்ளது.

சுகாதார பூங்கா எதிரில் ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகம், மகிளா நீதிமன்றம், மத்திய கூட்டுறவு வங்கி, கரூவூலம், கால்நடைத்துறை, வேளாண்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலகங்கள் உள்ளன. தினமும் பல்வேறு பணிகளுக்கான ஏராளமான பொதுமக்கள், அலுவலர்கள் வந்து செல்கின்றனர்.அவ்வாறு வருபவர்கள் அமர்ந்து ஓய்வெடுக்கும் வகையில் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் சுகாதாரப் பூங்கா வளாகம் கழிப்பறை வசதியுடன் சுற்றி வேலிகள் அமைக்கப்பட்டது. இந்த இடம் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் பாழாகியுள்ளது. வேலிகற்கள் சேதமடைந்துஉள்ளன

.சுகாதாரபூங்கா வளாகம்புதர் மண்டி கிடக்கிறது. வாகனங்கள் நிறுத்துமிடமாகவும், மரங்கள், வாகனங்கள் மறைவிடங்களை சிலர் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதால் சுகாதாரம் கேள்விகுறியாகியுள்ளது.எனவே, சுகாதார பூங்கா வளாகத்தை பராமரித்து பசுமை பூங்காவாக மாற்றி சுற்றிலும் வேலி அமைத்து, ஓய்வு எடுக்க வசதியாக இருக்கை வசதிகள், குடிநீர், கழிப்பறை வசதிகளை செய்துதர வேண்டும். அதற்கு கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X