ரயில்வே சாலையில் ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்

Added : செப் 19, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.காஞ்சிபுரம் ரயில்வே சாலை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, பழைய ரயில் நிலையம், தலைமை அஞ்சல் அலுவலகம், தியேட்டர், திருமண மண்படம், காய்கறி சந்தை, பெட்ரோல் பங்க் மற்றும் பல்வேறு கடைகள் உள்ளன.இதனால், ரயில்வே சாலையில் பொது மக்கள் நடமாட்டம்
ரயில்வே சாலையில் ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்



காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.காஞ்சிபுரம் ரயில்வே சாலை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, பழைய ரயில் நிலையம், தலைமை அஞ்சல் அலுவலகம், தியேட்டர், திருமண மண்படம், காய்கறி சந்தை, பெட்ரோல் பங்க் மற்றும் பல்வேறு கடைகள் உள்ளன.இதனால், ரயில்வே சாலையில் பொது மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து அதிகம் நிறைந்த சாலையாக உள்ளது. இதில், பல்வேறு கடைக்காரர்கள் தங்களது கடையை விரிவாக்கம் செய்ய நடைபாதையை ஆக்ரமித்துள்ளனர். மேலும், தள்ளுவண்டி, நடைபாதை கடைக்காரர்கள் சாலையை ஆக்கிரமித்து கடை வைத்துள்ளனர்.கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை நிறுத்த இடமில்லாததால், சாலையில் நிறுத்தி செல்கின்றனர். இதனால், ரயில்வே சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.குறிப்பாக விபத்து மற்றும் உயிருக்கு போராடும் நோயாளியை மருத்துவமனை அழைத்துச் செல்லும் '108' ஆம்புலன்ஸ் வாகனம் அடிக்கடி நெரிசலில் சிக்கிக்கொள்கிறது.மருத்துவமனைக்கு தாமாதமாக செல்லும் ஒவ்வொரு நிமிடமும் நோயாளியின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலை உள்ளது.இதனால், ரயில்வே சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றுவதோடு மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படாமல் இருக்க மாநகாட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X