ஆழம் பார்க்காத அதலை கண்மாய்

Added : செப் 19, 2022 | |
Advertisement
காரைக்குடி : காரைக்குடி அதலைக் கண்மாய் 30 ஆண்டுகளாக தூர்வாரப்படாததால், விவசாயம் முற்றிலும் பாதித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.காரைக்குடியில் பொதுப்பணிதுறையின் கீழ் உள்ளஅதலை கண்மாய். இதன் மூலம்200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.கடந்த 30ஆண்டாக துார்வாரவில்லை.கண்மாய் முழுவதும் கருவேல மரங்கள், ஆகாய தாமரைகொடிகள்வளர்ந்துள்ளன.மழையின் போதுதண்ணீர் தேக்குவதில்
ஆழம் பார்க்காத அதலை கண்மாய்

காரைக்குடி : காரைக்குடி அதலைக் கண்மாய் 30 ஆண்டுகளாக தூர்வாரப்படாததால், விவசாயம் முற்றிலும் பாதித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

காரைக்குடியில் பொதுப்பணிதுறையின் கீழ் உள்ளஅதலை கண்மாய். இதன் மூலம்200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.கடந்த 30ஆண்டாக துார்வாரவில்லை.கண்மாய் முழுவதும் கருவேல மரங்கள், ஆகாய தாமரைகொடிகள்வளர்ந்துள்ளன.மழையின் போதுதண்ணீர் தேக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மேலும் கழிவுநீர் முழுவதும் கண்மாயில் கலந்துள்ளதால் விவசாயம் பாதித்துள்ளன.

இது குறித்து நகராட்சி கவுன்சிலர் மெய்யர் கூறியதாவது,காரைக்குடி நகராட்சி முழுவதும் மழைக்காலம் தொடங்கும் முன்வரத்துகால்வாய்கள் துார்வாரும் பணி செய்கின்றனர்.ஆனால் அதலைக் கண்மாய் கடந்த 30 ஆண்டாக துாரவாரவில்லை. நகரில் உள்ள கழிவு நீர் கால்வாயில் சேகரமாகும் அனைத்து கழிவுநீரும் இக்கண்மாயில் தான் கலக்கிறது. பொதுப்பணித்துறையினர் இக்கண்மாயை காக்க நடவடிக்கை எடுக்க வில்லை, என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X