ராமநாதபுரத்தில் பிரிட்ஜ் பள்ளிகுழந்தைகளின் கலை விழா| Dinamalar

ராமநாதபுரத்தில் 'பிரிட்ஜ்' பள்ளிகுழந்தைகளின் கலை விழா

Added : செப் 19, 2022 | |
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் 'பிரிட்ஜ்' பள்ளி குழந்தைகளுக்கான, மாவட்ட அளவிலான கலை விழா நடந்தது. கிராம தொழிலாளர்கள் நலச்சங்கம் (ஆர்.டபிள்யூ.டி.எஸ்) சார்பில், ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம், திருப்புல்லாணி உள்ளிட்ட கிராமங்களில் கல்வி, சுகாதாரம் குறித்த சேவை பணிகள் நடக்கின்றன. கொரோனா காலக்கட்டத்தில் பள்ளிப்பாடங்களை ஆன்-லைனில் படித்த மாணவர்களின் சந்தேகங்கள்
ராமநாதபுரத்தில் 'பிரிட்ஜ்' பள்ளிகுழந்தைகளின் கலை விழா

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் 'பிரிட்ஜ்' பள்ளி குழந்தைகளுக்கான, மாவட்ட அளவிலான கலை விழா நடந்தது.



கிராம தொழிலாளர்கள் நலச்சங்கம் (ஆர்.டபிள்யூ.டி.எஸ்) சார்பில், ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம், திருப்புல்லாணி உள்ளிட்ட கிராமங்களில் கல்வி, சுகாதாரம் குறித்த சேவை பணிகள் நடக்கின்றன. கொரோனா காலக்கட்டத்தில் பள்ளிப்பாடங்களை ஆன்-லைனில் படித்த மாணவர்களின் சந்தேகங்கள் தீர்க்கப்படாத சூழல் இருந்தது. இக்குறையை போக்குவதற்காக, காலையில் பணிக்குசென்ற குழந்தைகளுக்காக கல்வி இணைப்பு பாலமாக செயல்பட மாலைநேர வகுப்பு நடத்துவதற்காக பிரிட்ஜ் பள்ளி தொடங்கப்பட்டது. குழந்தை உரிமைகளும் நீங்களும் அமைப்பின் உதவியுடன் 15 கிராமங்களில் 6 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு 2021 ஆகஸ்ட் முதல் 2022 ஆகஸ்ட் வரை ப்ரிட்ஜ் பள்ளி மாலை நேர வகுப்புகள் நடந்தது.



இந்த பிரிட்ஜ் பள்ளி குழந்தைகளின் மாவட்ட அளவிலான கலை விழா ராமநாதபுரத்தில் நடந்தது. சுற்றுச்சூழல் மாசுபடுதல் குறித்த குழு நாடகம், பாரம்பரிய விளையாட்டுகள், குழந்தைகள் சட்டம் குறித்த குழு விவாதம் நடந்தது. கிராம தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் இயக்குனர் சாத்தையா தலைமை வகித்தார்.குழந்தைகள் நல குழுமம் தேன்மொழி, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சித்ரா தேவி, தொம்மை ஆரோக்கிய மெர்லின் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X