ராமேஸ்வரத்தில் பந்தல் வசதியின்றி பக்தர்கள் வெயிலில் அவதி

Added : செப் 19, 2022 | |
Advertisement
ராமேஸ்வரம் : விடுமுறை நாளான நேற்று ராமேஸ்வரம் கோயிலில் குவிந்த பக்தர்கள், புனித நீராட செல்லும் வழியில் பந்தல்வசதி இல்லாததால், வெயிலின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டனர்.தீர்த்த தலமான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடினால், பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும் என்பது ஐதீகம். நேற்று ஞாயிறு விடுமுறை யொட்டி தமிழகத்தின்
ராமேஸ்வரத்தில் பந்தல் வசதியின்றி பக்தர்கள் வெயிலில் அவதி

ராமேஸ்வரம் : விடுமுறை நாளான நேற்று ராமேஸ்வரம் கோயிலில் குவிந்த பக்தர்கள், புனித நீராட செல்லும் வழியில் பந்தல்வசதி இல்லாததால், வெயிலின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டனர்.

தீர்த்த தலமான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடினால், பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும் என்பது ஐதீகம். நேற்று ஞாயிறு விடுமுறை யொட்டி தமிழகத்தின் பலபகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். இந்நிலையில் நேற்று வெயில் சுட்டெரித்த நிலையில், பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு சன்னதி தெரு, ரதவீதி வழியாக கோயில் வடக்கு வாசலில் நுழைந்து 22 தீர்த்தங்களில் நீராடினார்கள்.

ஆனால் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், வடக்கு ரத வீதியில் சுட்டெரிக்கும் வெயிலில் பக்தர்கள் வெகுநேரம் காத்திருந்து பெரும் அவதியுடன் நீராட சென்றனர். ஓராண்டுக்கு கோயிலில் ரூ.13 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்தும், பக்தர்கள் நலனுக்காக சன்னதி தெரு, வடக்கு வீதியில் நிழல் தரும் பந்தல் அமைக்க பலமுறை வலியுறுத்தியும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் ஹிந்து அறநிலையதுறையினர் கண்டு கொள்ளவில்லை என ஹிந்து அமைப்பினர் வேதனையுடன் தெரிவித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X