காலபைரவருக்கு  தேய்பிறை சம்புகாஷ்டமி பூஜை| Dinamalar

காலபைரவருக்கு  தேய்பிறை சம்புகாஷ்டமி பூஜை

Added : செப் 19, 2022 | |
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் காலபைரவருக்கு புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி சம்புகாஷ்டமி வழிபாடு நடந்தது. தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவரை வணங்கினால் துன்பங்கள் நீங்கி மன அமைதி உண்டாகும் என்பது நம்பிக்கை. புரட்டாசி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி தினம் சம்புகாஷ்டமி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சம்புகாஷ்டமி தினத்தன்று கால பைரவரை வழிபட்டு,



கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் காலபைரவருக்கு புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி சம்புகாஷ்டமி வழிபாடு நடந்தது. தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவரை வணங்கினால் துன்பங்கள் நீங்கி மன அமைதி உண்டாகும் என்பது நம்பிக்கை. புரட்டாசி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி தினம் சம்புகாஷ்டமி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சம்புகாஷ்டமி தினத்தன்று கால பைரவரை வழிபட்டு, அன்னதானம் வழங்கினால், ஐஸ்வரியம் பெருகும். பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால், காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் அகலும். இழந்த செல்வங்களை மீண்டும் பெறலாம். தொழில் வளர்ச்சி காணலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் என்பது ஐதீகம்.அதன்படி கள்ளக்குறிச்சி சிவகாம சுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீலமேனியராய் நாய் வாகனத்துடன் எழுந்தருளியுள்ள கால பைரவர் சுவாமிக்கு நேற்று சம்புகாஷ்டமி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. சுவாமிக்கு அபிேஷக, ஆராதனைகள் நடத்தி மந்திர ஜபம் வாசித்து பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினர். திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X