கிராம சாலைகளை புதுப்பிப்பதில் வனத்துறை அலட்சியம்| Dinamalar

கிராம சாலைகளை புதுப்பிப்பதில் வனத்துறை அலட்சியம்

Added : செப் 19, 2022 | |
திருக்கழுக்குன்றம் : செங்கல்பட்டு மாவட்டத்தில், வனப்பகுதியில் குறுக்கிடும் சாலைகள், பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி உள்ளது. இவற்றை புதுப்பிக்க, வனத்துறை அனுமதிக்காமல் அலட்சியம் காட்டி வருவதால் கிராமப் பகுதியினர் சாலைகளை சிரமத்துடன் கடந்து செல்கின்றனர்.செங்கல்பட்டு மாவட்டம், மாநில தலைநகர் சென்னையுடன் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. இப்பகுதி தொழில் வளம், உயர்கல்வி,
கிராம சாலைகளை புதுப்பிப்பதில் வனத்துறை அலட்சியம்திருக்கழுக்குன்றம் : செங்கல்பட்டு மாவட்டத்தில், வனப்பகுதியில் குறுக்கிடும் சாலைகள், பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி உள்ளது. இவற்றை புதுப்பிக்க, வனத்துறை அனுமதிக்காமல் அலட்சியம் காட்டி வருவதால் கிராமப் பகுதியினர் சாலைகளை சிரமத்துடன் கடந்து செல்கின்றனர்.செங்கல்பட்டு மாவட்டம், மாநில தலைநகர் சென்னையுடன் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. இப்பகுதி தொழில் வளம், உயர்கல்வி, மருத்துவ சிகிச்சை, போக்குவரத்து உள்ளிட்டவற்றால், வளர்ச்சி மிக்கதாக உள்ளது.பிற மாவட்ட பகுதியினர், வேலைவாய்ப்பு, கல்வி என, வாழ்க்கை முன்னேற்றம் கருதி, இங்கு குடியேறுகின்றனர்.மாவட்ட தலைநகர் செங்கல்பட்டு உள்ளிட்ட நகர்ப் பகுதிகளில் குடியிருப்போர், நகர்ப் பகுதி கட்டமைப்புகளுடன் வசிக்கின்றனர். கிராமப் பகுதியினரோ, இதற்கு மாறாக, பல வகைகளிலும் கடுமையாக சிரமப்படுகின்றனர்.திருக்கழுக்குன்றம், திருப்போரூர், செய்யூர் உள்ளிட்ட தாலுகா பகுதிகளில், வனத்துறை பகுதிகள் அருகில் வசிப்பவர்கள், சாலைகள் சீரழிந்து உள்ளதால், கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.கிராமப் பகுதிகளை, நெடுஞ்சாலைத் துறை சாலைகள் இணைக்கிறது. மாவட்டத்தின் பல பகுதிகளில், வனத்துறை காப்புக்காடு உள்ளதால், பல சாலைகள் வனப்பகுதியில் குறுக்கிடுகின்றன. மாவட்டத்தின் கிராமப் பகுதி சாலைகள், பல ஆண்டுகளுக்கு முன் சீரழிந்தன. போக்குவரத்து முக்கியத்துவம் கருதி, சில ஆண்டுகளுக்கு முன், அரசு நிதி ஒதுக்கி, புதிய சாலைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், பல சாலைகள், வனத்தில் கடக்கும் இடங்களில் மட்டும், தற்போது வரை சாலை அமைக்கப்படாமல், சீரழிந்த நிலையில் உள்ளது.உதாரணமாக, திருக்கழுக்குன்றம் - பொன்விளைந்தகளத்துார் இடையே, 9 கி.மீ., சாலை உள்ளது. பொன்பதர் கூடம் பகுதியில், இதன் 2 கி.மீ., வனப்பகுதியில் கடக்கிறது. இச்சாலை, 10 ஆண்டுகளுக்கு முன் சீரழிந்த நிலையில், புதிய சாலை அமைக்க, கடந்த 2019 - 20ல் நிதி ஒதுக்கி, புதிய சாலையும் அமைக்கப்பட்டது.வனப்பகுதியில் குறுக்கிடும் சாலையை புதுப்பிக்க, வனத்துறை அனுமதிக்காமல், அப்பகுதியில் மட்டும் அமைக்காமல் தவிர்க்கப்பட்டுள்ளது.பல ஆண்டுகளுக்கு முன் சீரழிந்த சாலை, கற்கள் பெயர்ந்து, கரடுமுரடான அபாய பள்ளங்களுடன், மேலும் மேலும் சீரழிகிறது.இத்தடத்தில், நரப்பாக்கம், எடையூர், வீரகுப்பம், பொன்பதிர்கூடம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் இருந்து, அத்யாவசியத்தேவைகள், கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, அரசு அலுவலகங்கள் என, தினமும் ஏராளமானோர், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு பகுதிகளுக்கு செல்கின்றனர்.பெண்கள், முதியோர் என, பெரும்பாலோனோர் இருசக்கர வாகனத்தில் செல்கின்றனர். வனத்துறை பகுதியில், சீரழிந்த சாலையை கடக்கும்போது, நிலைதடுமாறுகின்றனர்.இத்தடத்தின் அருகாமை, மற்றொரு தடத்தின், வீரகுப்பம் - சோகண்டி, 1 கி.மீ., பகுதி, திருக்கழுக்குன்றம் - ஒரகடம் சாலையின், குறிப்பிட்ட தொலைவு என, வனத்துறை பகுதியில் குறுக்கிட்டு, புதிதாக அமைக்க முடியாமல் சீரழிந்துள்ளது.இதேபோன்று, திருப்போரூர் அருகாமை பகுதிகளிலும், வனத்துறை பகுதி சாலைகள் சீரழிவால், மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.வனப்பகுதியில் குறுக்கிடும் சாலைகளை புதுப்பிக்க, வனத்துறையிடம் தொடர்ந்து அனுமதி கோரியும், கிடப்பில் உள்ளது.திருக்கழுக்குன்றம் பகுதி புறவழிப்பாதை, வனத்துறை பகுதியில், குறிப்பிட்ட தொலைவு குறுக்கிடுகிறது. இதை மேம்படுத்தியபோது, வனத்துறை பகுதியில், மேம்பாட்டிற்கு அனுமதிக்கவில்லை. இதுகுறித்து, நம் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டு, பிறகு அனுமதித்து சாலை மேம்படுத்தப்பட்டது.இப்பாதையில், கல்பாக்கம், மாமல்லபுரம் பகுதிகளுக்கு, கனரக வாகனங்கள் ஏராளமாக இயங்குகிறது.கனரக போக்குவரத்து உள்ள சாலைக்கே, வனத்துறை அனுமதித்துள்ள நிலையில், பெரும்பாலும், இருசக்கர வாகனமே பிரதானமாக கடக்கும், கிராமப் பகுதி சாலையை மேம்படுத்த, விதிகளை கூறி, அனுமதிக்காமல் புறக்கணிக்கிறது. பொதுமக்கள் நலன் கருதி, வனத்துறை பகுதி சாலைகளை சீரமைக்க, அத்துறை விரைந்து அனுமதிக்க, மக்கள் வலியுறுத்துகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X