பள்ளி கல்லுாரி செய்திகள்

Added : செப் 19, 2022 | |
Advertisement
கல்லுாரிகளுக்கு இடையேயான போட்டிகள்சிவகாசி: காளீஸ்வரி கல்லுாரி கணித மன்றம் சார்பில் மாநில அளவிலான கல்லுாரிகளுக்கு இடையேயான போட்டிகள் நடந்தது. துறைத்தலைவர் லலிதாம்பிகை வரவேற்றார். கல்லுாரி துணை முதல்வர் பாலமுருகன் தலைமை வகித்தார். வினாடி வினா, கட்டுரை வாசித்தல், சிக்கலான கணக்குகளை தீர்த்தல், கணித வண்ணக்கோலம், மவுன மொழி, வடிவியல் முறை வரைதல் உள்ளிட்ட பல்வேறு



கல்லுாரிகளுக்கு இடையேயான போட்டிகள்

சிவகாசி: காளீஸ்வரி கல்லுாரி கணித மன்றம் சார்பில் மாநில அளவிலான கல்லுாரிகளுக்கு இடையேயான போட்டிகள் நடந்தது. துறைத்தலைவர் லலிதாம்பிகை வரவேற்றார். கல்லுாரி துணை முதல்வர் பாலமுருகன் தலைமை வகித்தார். வினாடி வினா, கட்டுரை வாசித்தல், சிக்கலான கணக்குகளை தீர்த்தல், கணித வண்ணக்கோலம், மவுன மொழி, வடிவியல் முறை வரைதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. 17 கல்லுாரிகளில் இருந்து 256 மாணவர்கள் கலந்து கொண்டனர். ஒட்டுமொத்த புள்ளிகள் அடிப்படையில் சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி முதல் பரிசையும், எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி 2ம் பரிசையும் பெற்றது.

பயிற்சி பட்டறை

சிவகாசி: எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி முதுகலை, தமிழாய்வுத்துறை சார்பில் தொல் ஆவணங்கள் பட்டய வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு கல்வெட்டியல் பயிற்சி பட்டறை நடந்தது. கல்லுாரி முதல்வர் பழனீஸ்வரி தலைமை வகித்தார். தமிழ் துறை தலைவர் பொன்னி முன்னிலை வகித்தார். உதவி பேராசிரியர் தனலட்சுமி வரவேற்றார். மதுரை தியாகராசர் கல்லுாரி தமிழ் துறை உதவி பேராசிரியர் செல்வராக்கு, மதுரை செந்தமிழ் கல்லுாரி தமிழ் துறை உதவி பேராசிரியர் ஆறுமுகம் பேசினர். ஒருங்கிணைப்பாளர் பூங்கோதை நன்றி கூறினார். பட்டய வகுப்பு பயிலும் மாணவிகள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

மொழி, வேலைவாய்ப்பு பயிற்சி

சிவகாசி: அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி தமிழ் துறை தமிழாய்வு மையம் சார்பில் மொழிபெயர்ப்பும் பணி வாய்ப்பும் பயிற்சியும் மாணவர் பங்களிப்பும் என்ற தலைப்பில் பன்னாட்டு அளவிலான பயிற்சி பணிமனை நடந்தது. கல்லுாரி முதல்வர் அசோக் தலைமை வகித்தார். முதுகலை துறை தலைவர் சிவனேசன், இளநிலை தமிழ் துறை தலைவர் அருள்மொழி முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் தமிழரசி வரவேற்றார். தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக மொழிபெயர்ப்பு துறை இணை பேராசிரியர் ராஜேஷ், மதுரையைச் சேர்ந்த மொழி பெயர்ப்பாளர், எழுத்தாளர் ராஜேஸ்வரி, நியூசிலாந்து அரசு கல்வித்துறை பயிற்சியாளர் லக்குவன் சொக்கலிங்கம் பேசினர். ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ்செல்வன் நன்றி கூறினார். மாணவிகள் கலைபிருந்தா, பவித்ரா தொகுத்து வழங்கினர். தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X