குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் உயிரிழப்பு

Added : செப் 19, 2022 | |
Advertisement
ஓமலுார் : குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் உயிரிழந்தது குறித்து, பணியிலிருந்த அரசு டாக்டர்கள், செவிலியரிடம் விசாரணை நடக்கிறது.சேலம் மாவட்டம், ஓமலுார், காடையாம்பட்டி தாலுகா, காட்டூரைச் சேர்ந்தவர் சண்முகம், 30; கூலி தொழிலாளி. இவரது மனைவி சோனியா, 24; தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.மூன்றாவதாக கர்ப்பமான சோனியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு, கடந்த, 8ம் தேதி ஓமலுார் அரசு



ஓமலுார் : குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் உயிரிழந்தது குறித்து, பணியிலிருந்த அரசு டாக்டர்கள், செவிலியரிடம் விசாரணை நடக்கிறது.

சேலம் மாவட்டம், ஓமலுார், காடையாம்பட்டி தாலுகா, காட்டூரைச் சேர்ந்தவர் சண்முகம், 30; கூலி தொழிலாளி. இவரது மனைவி சோனியா, 24; தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.மூன்றாவதாக கர்ப்பமான சோனியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு, கடந்த, 8ம் தேதி ஓமலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.சுக பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. சோனியாவுக்கு, 12ம் தேதி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தனர்.
மறுநாள் மயங்கிய சோனியாவை, ஆப்பரேஷன் தியேட்டருக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் இறந்தார். உரிய நேரத்தில் டாக்டர்கள் சிகிச்சை அளிக்காததால், சோனியா இறந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.சோனியாவுக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள், செவிலியர்களிடம், சேலம் குடும்ப நல இணை இயக்குனர் அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
சேலம் மாவட்ட குடும்பநல இணை இயக்குனர் வளர்மதி கூறுகையில், ''குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. பிரேத பரிசோதன அறிக்கை வந்த பிறகே முடிவு செய்யப்படும்,'' என்றார்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X