தி.மு.க.,வினரின் 10 வருஷ, 'தாகம்' தணிஞ்சிட்டு இருப்பது தெரியலை போல!

Updated : செப் 19, 2022 | Added : செப் 19, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: மழை நீர் வடிகால் பணி என்ற பெயரில், சென்னையை நாசமாக்கி கொண்டிருக்கின்றனர். சென்னையின் தெருக்கள் முழுதும் மரணப் பள்ளங்களும், படுகுழிகளும் நிரம்பி கிடக்கின்றன. மக்கள் கடும் அவதியில் இருப்பது, ஆட்சியாளர்களின் கண்களுக்கும், செவிகளுக்கும் எட்டாமல் இருப்பது கொடூரம்.மக்களின் அவதி மட்டும் தான் உங்க கண்ணுக்கு
நாராயணன் திருப்பதி, சேகர், சசிகலா, ராமதாஸ், ஜவாஹிருல்லா, Narayanan Tirupati, Shekhar, Sasikala, Ramadoss, Jawahirullah,

தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: மழை நீர் வடிகால் பணி என்ற பெயரில், சென்னையை நாசமாக்கி கொண்டிருக்கின்றனர். சென்னையின் தெருக்கள் முழுதும் மரணப் பள்ளங்களும், படுகுழிகளும் நிரம்பி கிடக்கின்றன. மக்கள் கடும் அவதியில் இருப்பது, ஆட்சியாளர்களின் கண்களுக்கும், செவிகளுக்கும் எட்டாமல் இருப்பது கொடூரம்.

மக்களின் அவதி மட்டும் தான் உங்க கண்ணுக்கு தெரியுது... தி.மு.க.,வினரின் 10 வருஷ, 'தாகம்' தணிஞ்சிட்டு இருப்பது தெரியலை போல!


தமிழக பா.ஜ., பொருளாளர் சேகர் அறிக்கை: தி.மு.க., - எம்.பி., ராஜாவுக்கு சில கேள்விகள்... நீங்கள் ஹிந்துவா; ஹிந்து என்றால் நீங்கள் சொன்ன வேசி மகன் என்பதில் நீங்களும் அடக்கமா? தி.மு.க., தலைவர் குடும்பம் மற்றும் அவரது கட்சி சகாக்கள், இந்த கணக்கில் உள்ளவர்கள் தானே... தி.மு.க.,வின் மவுனம், ராஜாவை ஆதரிப்பதாக எடுத்துக் கொள்ளலாமா?

'ஹிந்து என்றால் திருடன்' என பேசிய கருணாநிதி வழிவந்தவர்களிடம், வேற என்னத்தைஎதிர்பார்க்க முடியும்?


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அறிக்கை: நரிக்குறவர் சமுகத்தினரை, பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துள்ளதற்கு, ஜெயலலிதா தான் முழு காரணம் என்ற உண்மையை மறைத்து, தி.மு.க.,வினர் தங்கள் சாதனையாக மார்தட்டி கொள்வது வேடிக்கையாக இருக்கிறது.

சும்மாவே மத்திய அரசின் திட்டங்களுக்கு தி.மு.க.,வினர், 'ஸ்டிக்கர்' ஒட்டுவாங்க... இப்ப மட்டும் கேட்கணுமா என்ன?


பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல், சளிக்காய்ச்சல் உள்ளிட்ட பல வகையான காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகின்றன. எந்தெந்த பகுதிகளில் காய்ச்சல் அதிகமாக பரவுகிறது என்பதை கண்டறிவதற்கு சோதனையோ, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படவில்லை. பள்ளிகள் வாயிலாகவே, குழந்தைகளுக்கு காய்ச்சல் அதிக அளவில் பரவுவதாக தோன்றுகிறது. எனவே, நிலைமை சீரடையும் வரை, ஒன்பதாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்.


latest tamil news



இப்பத்தான் கொரோனா களேபரம் முடிஞ்சு, பள்ளிகளை திறந்திருக்காங்க... மறுபடியும் மூடுனா, மாணவர்கள் படிப்பு என்னாவது? சுகாதார நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதே இதற்கு ஒரே வழி!


மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா அறிக்கை: தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் வெள்ளிக்கிழமை தொழுகை முடித்துவிட்டு வந்த பள்ளி மாணவர்கள், சிலரால் மிரட்டப்பட்டுள்ளனர். தி.மு.க., ஆட்சியில் உள்ள அமைதியையும், மதநல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் நோக்கில், திட்டமிட்டு நடத்தப்படும் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதச்சார்பற்ற தி.மு.க., அரசு கண்டிப்பாக இந்த விஷயத்தில் துரிதமான நடவடிக்கை எடுக்கும் என நம்பலாம்!



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatakrishnan - Mumbai,இந்தியா
20-செப்-202202:52:13 IST Report Abuse
Venkatakrishnan காமெடி நாராயணா... இத்தனை வருஷமா சென்னையில மழைநீர் தேங்குனபோது நீ வெடிக்க மட்டும்தான பாத்துகிட்டு இருந்த... இப்போ எதுக்கு இவ்ளோ வாய் பேசுற...?
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
19-செப்-202220:11:41 IST Report Abuse
Indhuindian என்று தணியும் இந்த கொள்ளை தாகம் என்று மடியும் இந்த வூஷல் மோகம்
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
19-செப்-202215:39:59 IST Report Abuse
sankar ஜென்மம் எடுத்தாலும் தணிக்காமுடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X