ஆலோ பிளாக் கல் விழுந்து மேஸ்திரி பலி; சாவில் சந்தேகமென உறவினர்கள் குற்றச்சாட்டு

Added : செப் 19, 2022 | |
Advertisement
ஓசூர், கும்பாரபேட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன், 50, கட்டட மேஸ்திரி; ஓசூர் அலசநத்தம் பகுதியில், கர்நாடகா மாநிலம், அத்திப்பள்ளியை சேர்ந்த மஞ்சுநாத், 38, என்பவருக்கு சொந்தமான இடத்தில் நடந்து வரும் கட்டுமான பணியில், மேஸ்திரி வெங்கடேசன் ஈடுபட்டிருந்தார். தினமும் ஊருக்கு சென்று வர முடியாது என்பதால், அந்த கட்டடத்திலேயே தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவு, வேலை முடிந்த பின்,


ஓசூர், கும்பாரபேட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன், 50, கட்டட மேஸ்திரி; ஓசூர் அலசநத்தம் பகுதியில், கர்நாடகா மாநிலம், அத்திப்பள்ளியை சேர்ந்த மஞ்சுநாத், 38, என்பவருக்கு சொந்தமான இடத்தில் நடந்து வரும் கட்டுமான பணியில், மேஸ்திரி வெங்கடேசன் ஈடுபட்டிருந்தார். தினமும் ஊருக்கு சென்று வர முடியாது என்பதால், அந்த கட்டடத்திலேயே தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவு, வேலை முடிந்த பின், மது அருந்தி விட்டு, கட்டடத்தில் துாங்கி கொண்டிருந்தார். அவர் அருகே, 10 சிமென்ட் மூட்டைகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டு, அதன் மீது தார்ப்பாய் விரித்து, அதற்கு மேலே ஆலோ பிளாக் கற்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், துாங்கி கொண்டிருந்த வெங்கடேசன் மீது, ஆலோ பிளாக் கற்கள் சரிந்து விழுந்ததில், தலையில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். நேற்று காலை வேலைக்கு வந்த தொழிலாளர்கள், வெங்கடேசன் இறந்து கிடப்பதை பார்த்து, ஹட்கோ போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சாவில் சந்தேகம் இருப்பதாகவும், வெங்கடேசன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, குற்றம் சாட்டிய அவரது உறவினர்கள், போலீசார் சரியான முறையில் விசாரிக்க கேட்டுக்கொண்டனர். ஹட்கோ போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X