செய்திகள் சில வரிகளில் சேலம்

Added : செப் 19, 2022 | |
Advertisement
த.மா.கா., ஆர்ப்பாட்டம்ஜி.கே.வாசன் பங்கேற்பு சேலம், செப். 19-தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில், மின் கட்டண உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரியும், சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே, இன்று காலை, 10:00 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில், கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகித்து பேசுகிறார். மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், சார்பு அணி தலைவர்கள்,

த.மா.கா., ஆர்ப்பாட்டம்
ஜி.கே.வாசன் பங்கேற்பு
சேலம், செப். 19-
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில், மின் கட்டண உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரியும், சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே, இன்று காலை, 10:00 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில், கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகித்து பேசுகிறார். மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், சார்பு அணி தலைவர்கள், நிர்வாகிகள், நகர, பேரூர், பகுதி வார்டு நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்துகொள்ள, சேலம் மாநகர் மாவட்ட தலைவர் உலகநம்பி கேட்டுக்கொண்டார்.
உண்டியல் திருட்டு
சேலம், செப். 19-
கிச்சிப்பாளையம், குமரகிரியில் வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. செப்., 10 நள்ளிரவில், கோவில் உண்டியலை உடைத்து, அதிலிருந்த, 7,000 ரூபாயை திருடிச்சென்றனர். இதுகுறித்து கோவில் செயலாளர் பாபு, கிச்சிப்பாளையம் போலீசில் புகாரளித்தார். அதன்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
போலீசுக்கு சிகிச்சை
சேலம், செப். 19-
சித்தனுாரை சேர்ந்த அண்ணாமலை மகன் ரவிகிருஷ்ணன், 31; இவர், கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி போலீஸ் ஸ்டேஷனில் போலீசாக பணியாற்றி வருகிறார். நேற்று விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்திருந்தவர், மாலை, புல்லட்டில் சூரமங்கலம் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, நாய் குறுக்கே வந்ததால், கீழே விழுந்து காயமடைந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவ
மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

பாண்டுரெங்கநாத சுவாமி
கோவிலில் அன்னாபிஷேகம்
சேலம்: சேலம் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள ருக்மணி சமேத பாண்டுரெங்கநாத சுவாமி கோவிலில், விஷ்ணு துர்க்கைக்கு அன்னாபிஷேகம் நேற்று நடந்தது. நிகழ்ச்சியையொட்டி வேத மந்திரங்கள் முழங்க ஹோமங்கள், பூர்ணாகுதி நடந்தது. பின், சுவாமிக்கு அபிஷேகம், அன்னாபிஷேகம், துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
மனித உரிமை கருத்தரங்கம்
தாரமங்கலம்: சேலம் மாவட்ட மக்கள் உரிமை கூட்டணி சார்பில், செங்குந்தர் செல்வம் ஆர்ட் சில்க் ஹாலில், மனித உரிமை விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். இதில் பகுதிவாரியாக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வை நிறுவனர் தென்பாண்டியன் வழங்கினார்.
வலிப்பு நோய்
மருத்துவ முகாம்
சேலம்: ஐ.எம்.ஏ., கிளை சங்க கட்டடத்தில், கோவை, கே.எம்.சி.ெஹச்., மருத்துவமனை சார்பில், வலிப்பு நோய் மருத்துவ முகாம், நேற்று நடந்தது. வலிப்பு நோய் மற்றும் நரம்பியல் சிகிச்சை நிபுணர் ராஜேஷ் சங்கர் ஐயர், பரிசோதனை, சிகிச்சை அளித்தார். மருந்தால் கட்டுப்படாத, வலிப்பு நோய் உள்ளவர்கள், வலிப்பால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு திருமணம் மற்றும் நல்ல குடும்ப வாழ்க்கைக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
37வது தடுப்பூசி முகாம்
35,000 பேருக்கு தடுப்பூசி
சேலம்: மாவட்டத்தில், 37வது தடுப்பூசி முகாம், 2,690 மையங்களில், நேற்று, காலை, 7:00 முதல் இரவு, 7:00 மணி வரை நடந்தது. இப்பணியில், 15 ஆயிரத்து, 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டனர். அவர்கள், வீடு, வீடாக சென்று, தடுப்பூசி போடாதவர்களை அடையாளம் கண்டு, அழைத்து வந்து முகாமில், தடுப்பூசி போட்டுகொள்ள செய்தனர். முதல் தவணை தடுப்பூசி, 447 பேர், 2வது தவணை தடுப்பூசி, 12 ஆயிரத்து, 862 பேர், பூஸ்டர் டோஸ், 21 ஆயிரத்து, 781 பேர் என, மொத்தம், 35 ஆயிரத்து, 90 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கிராம ஊழியர் சங்கம் முடிவு
சேலம், செப். 19-
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க, சேலம் மாவட்ட 2வது மாநாடு, சேலத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் சங்கர் தலைமை வகித்தார்.
மாநில தலைவர் திருமலைவாசன் கலந்துகொண்டு பேசியதாவது: சங்கத்தின் மாவட்ட மாநாடு, தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. டிச.,ல் நடத்தப்படும் மாநில மாநாட்டில், 14 அம்ச கோரிக்கையை
வலியுறுத்தி, அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். எங்களுக்கு சாதகமான சூழல் அமைந்தால், வருவாய்த்துறை அமைச்சர், முதல்வரை மாநாட்டுக்கு அழைப்போம். இல்லையெனில், ஊழியர்களின் கருத்து கேட்டு, அரசுக்கு எதிராக முக்கிய முடிவெடுப்போம். சங்க உறுப்பினர்களுக்கு பொங்கல் போனஸ், 3,000 ரூபாய் வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.

ஓமலுாரில் அ.ம.மு.க., பொதுக்கூட்டம்
ஓமலுார், செப். 19-
ஓமலுாரில், அ.ம.மு.க.,சார்பில் அண்ணாதுரை பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், சேலம் வடக்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் தலைமையில், நேற்று இரவு நடந்தது.
முன்னாள் அமைச்சரும், கட்சி துணைபொதுச்செயலாளருமான சண்முகவேலு பேசுகையில்,
''அ.தி.மு.க., விளையாட்டு கட்சியாக மாறி ஏற்பட்ட குழப்பத்தால், தி.மு.க., ஆட்சிக்கு வந்தது. தேர்தல் அறிக்கையில் கூறியதை தி.மு.க., நிறைவேற்றவில்லை. உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த பின், சொத்து வரி விதிப்பில் மாற்றம், மின்சார கட்டணம் உயர்வு போன்றவற்றால், மக்களுக்கு பெரும் சுமையை கொடுத்துள்ளது,'' என்றார்.
சுகவனேஸ்வரர் கோவில்
தல புராண நுால் வெளியீடு
சேலம், செப். 19--
சேலம் தெய்வீக தமிழ்சங்க அறக்கட்டளை சார்பில், சுகவனேஸ்வரர் கோவில் தல புராண நுால் வெளியீட்டு விழா, அழகாபுரத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு சண்முகா நிறுவனங்கள் தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். தெய்வீக தமிழ் சங்க தலைவர் ராமன் வரவேற்றார்.
எழுத்தாளரும், ஆன்மிக சொற்பொழிவாளருமான இந்திரா சவுந்திரராஜன் பங்கேற்று பேசுகையில், ''கோவில் தல புராண நுால் வெளியீடு என்பது வேள்விக்கு மேலான விஷயம்,'' என்றார். தொடர்ந்து, அட்டாவதானம் சொக்கலிங்கப்புலவர் மொழிபெயர்த்து, 1893ம் ஆண்டு வெளிவந்த சுகவனேஸ்வரர் கோவிலின் தலபுராண நுாலின், மறுபதிப்பை இந்திரா சவுந்திரராஜன் வெளியிட்டார். பின், விருதுகளும் வழங்கப்பட்டன.
விழாவில் தெய்வீக தமிழ் சங்க பொருளாளர் ஸ்ரீதர், ஆன்மிக மைய தலைவர் குணசேகரன், ஏத்தாப்பூர் ஊத்துமலை முருகன் கோவில் தலைவர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X