சீட்டு நடத்தி தலைமறைவான பெண் போலீசில் ஆஜர்: மக்கள் முற்றுகை

Added : செப் 19, 2022 | |
Advertisement
ஆத்துார்: ஆத்துாரில், தீபாவளி பலகார சீட்டு மற்றும் கடன் பெற்று தலைமறைவான பெண், ஆத்துார் போலீசில் விசாரணைக்கு ஆஜரானபோது, பாதிக்கப்பட்ட மக்கள் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். ஆத்துார் அருகே, விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர், 51; இவரது மனைவி மாலினி, 41; இவர்கள், தீபாவளி பலகார சீட்டு நடத்தி, வாரம் தலா, 100 ரூபாய் வீதம், மாதம் 400 ரூபாய் என, மொத்தம் 19.20 லட்சம் ரூபாய் வசூல் செய்து

ஆத்துார்: ஆத்துாரில், தீபாவளி பலகார சீட்டு மற்றும் கடன் பெற்று தலைமறைவான பெண், ஆத்துார் போலீசில் விசாரணைக்கு ஆஜரானபோது, பாதிக்கப்பட்ட மக்கள் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.

ஆத்துார் அருகே, விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர், 51; இவரது மனைவி மாலினி, 41; இவர்கள், தீபாவளி பலகார சீட்டு நடத்தி, வாரம் தலா, 100 ரூபாய் வீதம், மாதம் 400 ரூபாய் என, மொத்தம் 19.20 லட்சம் ரூபாய் வசூல் செய்து வந்துள்ளனர். தவிர, அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட நபர்களிடம், கடன் தொகையாக, பல லட்சம் ரூபாய் பெற்றுள்ளனர்.


கடந்த, ஆக., 18ல், தீபாவளி சீட்டுக்கு பணம் மற்றும் கடன் தொகை தராமல், சந்திரசேகர் தனது குடும்பத்தினருடன் தலைமறைவாகினர். இதுகுறித்து, தீபாவளி பலகார சீட்டுக்கு பணம் கட்டியவர்கள், ஆத்துார் டவுன் போலீசில் புகாரளித்தனர். புகாரை, சேலம் மாவட்ட குற்றப்பிரிவுக்கு பரிந்துரை
செய்தனர். தலைமறைவாக இருந்த மாலினி, நேற்று, ஆத்துார் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்கு ஆஜரானார்.
தகவலறிந்த, 100க்கும் மேற்பட்டோர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். அப்போது, பலகார சீட்டு நடத்திய மாலினி, 'வரும் அக்.,ல் அனைவருக்கும் பணம் வழங்குகிறேன்' என, போலீசார் முன்னிலையில் உறுதியளித்தார். அதன்பின், அனைவரும் கலைந்து சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X