தமிழகத்தில் 2 நிழல் முதல்வர்கள் முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு| Dinamalar

தமிழகத்தில் 2 நிழல் முதல்வர்கள் முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

Added : செப் 19, 2022 | |
''தமிழகத்தில் இரண்டு நிழல் முதல்வர்கள் உள்ளனர்,'' என இடைப்பாடியில் நடந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் குற்றம்சாட்டினார்.அண்ணாதுரை, 114வது பிறந்தநாள் பொதுக்கூட்டம், நேற்று இரவு இடைப்பாடியில் நடந்தது. நகர செயலர் முருகன் தலைமை வகித்தார். மன்ற முன்னாள் சேர்மேன் கதிரேசன் வரவேற்றார். இக்கூட்டத்தில் முன்னாள் முமைச்சரும், அ.தி.மு.க., செய்தி தொடர்பு செயலருமான

''தமிழகத்தில் இரண்டு நிழல் முதல்வர்கள் உள்ளனர்,'' என இடைப்பாடியில் நடந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் குற்றம்சாட்டினார்.
அண்ணாதுரை, 114வது பிறந்தநாள் பொதுக்கூட்டம், நேற்று இரவு இடைப்பாடியில் நடந்தது. நகர செயலர் முருகன் தலைமை வகித்தார். மன்ற முன்னாள் சேர்மேன் கதிரேசன் வரவேற்றார். இக்கூட்டத்தில் முன்னாள் முமைச்சரும், அ.தி.மு.க., செய்தி தொடர்பு செயலருமான வைகைச்செல்வன் கலந்து கொண்டு பேசுகையில், ''அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி இன்னும், 30 நாளில் பொதுச்செயலராக தேர்வு செய்யப்படவுள்ளார்.
தமிழகத்தில் வீட்டுவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு போன்றவற்றை உயர்த்தியது தான் திராவிட மாடல் ஆட்சியா? ஸ்டாலின் முதல்வராக இருந்தாலும், மருமகன் சபரீசனும், மகன் உதயநிதியும் நிழல் முதல்வர்களாக உள்ளனர்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X