'நீட்'டில் பாவை வித்யாஸ்ரம், ஆலன் மாணவர்கள் சாதனை: தங்க நாணயங்கள் பரிசளித்து பாராட்டு

Added : செப் 19, 2022 | |
Advertisement
நாமக்கல்: 'நீட்' தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்த, பாவை வித்யாஸ்ரம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தங்கக்காசுகள் பரிசளிக்கப்பட்டது.இந்தியாவில் தலைசிறந்த போட்டித்தேர்வு நிறுவனமான, ஆலன் கெரியர் இன்ஸ்டிடியூட், தமிழகத்தில் பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு, நீட் போன்ற போட்டித்தேர்வுகளுக்கு, மிகச்சிறந்த பயிற்சி அளித்து


நாமக்கல்: 'நீட்' தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்த, பாவை வித்யாஸ்ரம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தங்கக்காசுகள் பரிசளிக்கப்பட்டது.
இந்தியாவில் தலைசிறந்த போட்டித்தேர்வு நிறுவனமான, ஆலன் கெரியர் இன்ஸ்டிடியூட், தமிழகத்தில் பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு, நீட் போன்ற போட்டித்தேர்வுகளுக்கு, மிகச்சிறந்த பயிற்சி அளித்து வருகிறது. இந்நிலையில், நீட் தேர்வில், பாவை ஆலன் கெரியர் இன்ஸ்டியூட்டைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். ஆலன் பாவை மாணவர்கள் ஜானவி மற்றும் ரோஹித் இருவரும், நீட்டில், 720க்கு, 700 மதிபெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளனர். பாவை -ஆலன், பிளஸ் 2 மாணவர்கள் செல்வன், குகன் ஆகியோர், 720-க்கு, 670 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் 1,482-வது இடமும், ஸ்ரீஹரிதா, 665 மதிப்பெண்களும், வைபவ், 646 மதிப்பெண்களும், பிரஜீத், 645 மதிப்பெண்களும், ஸ்மிரிதி, 640 மதிப்பெண்களும் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
இந்திய அளவில் முதலிடத்தை ஆலன் மாணவி கனிஷ்கா பெற்று சாதனை புரிந்துள்ளார். முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு முறையே, தலா, 8 கிராம், 4 கிராம் தங்கம், வெள்ளி பதக்கங்களும் வழங்கி, சாதனை மாணவர்களை, பாவை தலைவர் நடராஜன் கவுரவித்தார். சாதனை மாணவர்களை உருவாக்கிய பாவை பள்ளிகளின் இயக்குனர் சதீஸ், முதல்வர் ரோஹித் சதீஸ், பொறுப்பாளர் பிரேம் கிஷோர் உள்ளிட்ட ஆசிரியர் குழுவை, பாவை கல்விநிறுவனங்களின் தலைவர் நடராஜன், தாளாளர் மங்கை நடராஜன் ஆகியோர் பாராட்டினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X