சிலவரி அரசியல்...| Dinamalar

சிலவரி அரசியல்...

Added : செப் 19, 2022 | |
சென்னையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க பல இடங்களில் தோண்டப்பட்ட பள்ளங்களில் வாரக்கணக்கில் கட்டுமானப் பணி நடைபெறவில்லை. கழிவுநீர் குழாய் உடைந்து அப்பள்ளங்களில் மழைநீரும், கழிவுநீரும் கலந்து சாக்கடையாக மாறிக் கிடக்கின்றன. இதனால் கொசுக்களும், கிருமிகளும் உருவாகி நோயைப்பரப்பி வருகின்றன. சென்னையில் பரவும் காய்ச்சலுக்கு இந்த சாக்கடை பள்ளங்களும் காரணம் என்பதை



சென்னையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க பல இடங்களில் தோண்டப்பட்ட பள்ளங்களில் வாரக்கணக்கில் கட்டுமானப் பணி நடைபெறவில்லை. கழிவுநீர் குழாய் உடைந்து அப்பள்ளங்களில் மழைநீரும், கழிவுநீரும் கலந்து சாக்கடையாக மாறிக் கிடக்கின்றன. இதனால் கொசுக்களும், கிருமிகளும் உருவாகி நோயைப்பரப்பி வருகின்றன. சென்னையில் பரவும் காய்ச்சலுக்கு இந்த சாக்கடை பள்ளங்களும் காரணம் என்பதை மறுக்க முடியாது.- அன்புமணி, பா.ம.க., தலைவர்



எச்1என்1, இன்ப்ளுயன்சா காய்ச்சல் சிறுவர்களுக்கு எளிதில் பரவுவதால் 1 முதல் 9ம் வகுப்புவரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். மக்களின் அச்சத்தை போக்கி உரிய மருத்துவ உதவிகளை தமிழக அரசு உடனடியாக அளிக்க வேண்டும்.- வாசன், த.மா.கா., தலைவர்



நவீன யுகத்திலும் தீண்டாமை என்பது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அதிலும் மாணவர்களின் மனதில் நஞ்சை விதைக்கும் செயல்பாடுகள் கண்டனத்திற்குரியவை. தென்காசி பகுதியில் மட்டுமல்ல தமிழகத்தில் எங்கும் இனி இத்தகைய சம்பவங்கள் நிகழக்கூடாது. தீண்டாமையைப்போலவே மத வெறுப்பும் மோசமானது. இத்தகையை செயலை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும்.- தினகரன், அ.ம.மு.க., பொதுச்செயலர்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X