செய்திகள் சில வரிகளில் கரூர்

Added : செப் 19, 2022 | |
Advertisement
வேங்காம்பட்டியில்குளத்தை துார்வார கோரிக்கைகிருஷ்ணராயபுரம், செப். 19 -கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வேங்காம்பட்டி கிராமத்தில் மழை நீர் சேமிப்பு குளத்தை துார்வார வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வேங்காம்பட்டி கிராமத்தில் இருந்து புதுப்பட்டிக்கு செல்லும் வழியில் மழை நீர் சேமிப்பு குளம் உள்ளது. இந்த குளத்தில் மழை காலங்களில் சாலை வழியாக

வேங்காம்பட்டியில்
குளத்தை துார்வார கோரிக்கை
கிருஷ்ணராயபுரம், செப். 19 -
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வேங்காம்பட்டி கிராமத்தில் மழை நீர் சேமிப்பு குளத்தை துார்வார வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேங்காம்பட்டி கிராமத்தில் இருந்து புதுப்பட்டிக்கு செல்லும் வழியில் மழை நீர் சேமிப்பு குளம் உள்ளது. இந்த குளத்தில் மழை காலங்களில் சாலை வழியாக வரும் மழை நீர் சேமிக்கப்படுகிறது. இதன் மூலம் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது.
இந்நிலையில் மழை நீர் சேமிப்பு குளத்தில் அதிகமான செடி, கொடிகள் வளர்ந்துள்ளதால் மழை நீர் சேமிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, இந்த குளத்தில் நீர் சேமிப்புக்கு இடையூறாக உள்ள செடிகளை அகற்றி, குளத்தை துார்வார, பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குளித்தலையில் இந்து
முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
குளித்தலை, செப். 19-
ஹிந்துக்களை இழிவாக பேசிய தி.மு.க., எம்.பி., ஆ.ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி குளித்தலை, பஸ் ஸ்டாண்டு, காந்தி சிலை முன்பு இந்து முன்னணி அமைப்பினர் ‍நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் வக்கீல் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்தி, மாவட்ட செயலாளர் ராஜலிங்கம், குளித்தலை நகர தலைவர் துரை, திருச்சி கோட்டத் தலைவர் கனகராஜ் ஆகியோர் பங்கேற்று, கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் இந்து முன்னணி அமைப்பினர் திரளாக கலந்து கொண்டனர்.
தென்னை 'கள்' விற்றவர் கைது
குளித்தலை, செப். 19-
குளித்தலை அருகே, தென்னை 'கள்' விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
குளித்தலையை அடுத்த, சொக்கநாதன்புதுார், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன், 43. இவர், குட்டிக்
காரன்புதுார், குப்புசாமி என்பவரது தென்னந்தோப்பில், தென்னை மரத்தில் இருந்து கள் உற்பத்தி செய்து, பொதுமக்களுக்கு விற்பனை செய்து வந்தார். தகவல் அறிந்த மாயனுார் போலீசார், கணேசனிடமிருந்து 5 லிட்டர் தென்னை கள்ளை பறிமுதல் செய்து, வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர்.
விஸ்வகர்மா ஜெயந்தி விழா
கரூர், செப். 19-
கரூரில், ஸ்ரீ விஸ்வ பிராமண சபையோர்கள் கைலாய வாகன மண்டகப்படி மக்கள் நலச்சங்கம் சார்பில், விஸ்வகர்மா ஜெயந்தி விழா, சித்தி விநாயகர் கோவிலில் நேற்று நடந்தது.
காலை, 7:30 மணிக்கு ஜெயந்தி விழா, விராட் விஸ்வகர்மா ஹோமத்துடன் தொடங்கியது. பிறகு, காயத்திரி தேவி, விஸ்வகர்மாவுக்கு, சிறப்பு அபிேஷகம் நடந்தது. மஹா தீபாராதனைக்கு, பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, விராட் விஸ்வகர்மா, காயத்திரி தேவி மற்றும் விநாயகரின் உற்சவ திருவீதி உலா, வஞ்சிலீஸ்வரர் கோவிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக சென்று, சித்தி விநாயகர் கோவிலை அடைந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
குடிநீர் டேங்க் அருகில் கிடந்த
மருத்துவ கழிவு மூட்டைகள்
ஈரோடு, செப். 19-
ஈரோடு மாநகரில் குடிநீர் டேங்க் அருகே மருத்துவ மற்றும் மருந்து கழிவுகள், மூட்டை, மூட்டையாக வீசப்பட்டு கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஈரோடு மாநகராட்சி, 23வது வார்டு வீரப்பன்சத்திரம், சிதம்பரனார் வீதி, அரசு பொது நுாலகத்தின் பக்கவாட்டு பகுதியில் குடிநீர் டேங்க் உள்ளது. இங்கு நேற்று மருத்துவ கழிவு, மருந்து கழிவு என இரு மூட்டைகள் கிடந்தன.
இதுகுறித்து மக்கள் கூறியதாவது: இப்பகுதி
யில் முன்பு குப்பை தொட்டி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது தொட்டி அகற்றப்பட்டு விட்டது. இந்நிலையில் மூட்டைகளை யாரோ போட்டு சென்றுள்ளனர்.
காலாவதி மருந்து, மாத்திரைகள் மூட்டைகளில் இருந்தன. ஊசி, ஊசி மருந்து, பயன்பாட்டில் உள்ள மருந்து பாட்டில்களும் இருந்தன. குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் மருத்துவமனை இல்லாத சூழலில், மருத்துவ கழிவு மூட்டைகள் கிடந்தது ஆச்சர்யமாக உள்ளது. இவற்றை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பிரதமர் மோடி பிறந்தநாள்
பா.ஜ., சார்பில் பொது மருத்துவ முகாம்
குளித்தலை, செப். 19-
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 72வது பிறந்த நாளை ஒட்டி, தோகைமலை ஒன்றிய பா.ஜ., சார்பில், ஆர்.டி.மலையில் பொது மருத்துவம், கண் சிகிச்சை மற்றும் ரத்த தான முகாம் நடந்தது.
ஆர்.டி.மலை, சமுதாய மன்றத்தில் நேற்று காலை 11:00 மணியளவில் நடைபெற்ற முகாமிற்கு ஒன்றிய செயலாளர் ராஜாபிரதீப் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் செந்தில்நாதன் பங்கேற்று, விளக்கேற்றி,
மருத்துவ முகாமை தொடங்கி
வைத்தார்.
இதில், திருச்சி தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் ரத்த வங்கி மருத்துவ குழு மூலம் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, மருந்து, மாத்திரை வழங்கினர்.
தொடர்ந்து, பா.ஜ., கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினர். மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் வேல்மயில், மாவட்ட பொது செயலாளர் ராஜ்குமார், மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
அசுர வேகத்தில் செல்லும்
கனரக வாகனங்களால் விபத்து அபாயம்
கரூர், செப். 19-
கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் அசுர வேகத்தில் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இவ்வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இதில் கனரக வாகனங்களான லாரிகள், டிப்பர் லாரிகள், தனியார் பஸ்கள், கார்கள், ஆம்னி பஸ்கள், 100 கி.மீ.,க்கும் அதிக வேகத்தில் செல்கின்றன. இந்த வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள அதிக வெளிச்சத்தை உமிழும் திறன் வாய்ந்த விளக்குகளால் இரவு நேரங்களில் எதிரே இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர். குறிப்பாக பெண்கள், குழந்தைகளுடன் வருபவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இது குறித்து இருசக்கர வாகன ஓட்டிகள் கூறியதாவது: அதிக திறன் வாய்ந்த விளக்குகளை வாகனங்களின் முன்புறத்தில் பலர் பொருத்துகின்றனர். இவை, இரவில் எதிரே வாகனம் ஓட்டி வருபவர்களை தடுமாற செய்கின்றன. எனவே, வாகன விதிகளின்படி அதிக திறன் வாய்ந்த முகப்பு விளக்குகளை பொருத்தியுள்ள வாகனங்களை தீவிர ஆய்வு செய்ய வேண்டும். மேலும், கனரக வாகனங்கள் விபத்து ஏற்படுத்தும் வகையில் அசுர வேகத்தில் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X