பெண்களுக்கு வட்டார ஒருங்கிணைப்பாளர் பணி

Added : செப் 19, 2022 | |
Advertisement
கரூர் மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையிலான வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணிக்கு விருப்பம் உள்ள 28 வயதுக்குட்பட்ட பெண்கள், வரும் 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் கரூர், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, கடவூர் மற்றும் தோகைமலை



கரூர் மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையிலான வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணிக்கு விருப்பம் உள்ள 28 வயதுக்குட்பட்ட பெண்கள், வரும் 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் கரூர், கிருஷ்ண
ராயபுரம், அரவக்குறிச்சி, கடவூர் மற்றும் தோகைமலை வட்டாரங்களில் காலியாகவுள்ள ஒப்பந்த அடிப்படையிலான, 6 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடம் நிரப்பப்படுகிறது. எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் மாவட்ட அளவிலான தேர்வுக்குழு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இப்பணியிடத்துக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள், ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி, 6 மாதம் கணினி சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும். 28 வயதுக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
குறைந்தபட்சம், 2 ஆண்டு
கள் போன்ற திட்டங்களில் பணிபுரிந்த அனுபவம் இருத்தல் வேண்டும். சம்மந்தப்பட்ட வட்டாரத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். தகுதியான பெண் விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்க
லாம். இதில், வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாத மதிப்பூதியமாக, 12,000 ரூபாய் வழங்கப்படும். மேற்காணும் தகுதி உள்ளவர்கள் உரிய விண்ணப்ப படிவத்தை, திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண் அலகு, கரூர் என்ற முகவரியில் அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து வரும் செப்., 26 மாலை, 5.45 மணிக்குள் நேரிலோ அல்லது தபால்
மூலமாகவோ அனுப்பலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X