கனியாமூரில் மரநாய் மீட்பு

Added : செப் 19, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி : கனியாமூரில் சுற்றி திரிந்த மரநாயினை வனத்துறை அலுவலர்கள் பாதுகாப்பாக மீட்டு காப்புகாட்டில் விட்டனர்.சின்னசேலம் அடுத்த கனியாமூர் கிராமத்தை சேர்ந்த பழனிவேல் மகன் விஜயகுமார் என்பவரது விளைநிலத்தில் அரியவகை விலங்கினம் சுற்றி திரிந்துள்ளது. கோழி கூண்டிற்குள் விலங்கு இருந்த நிலையில், விஜயகுமார் கூண்டினை பூட்டிவிட்டு வனத்துறையினருக்கு தகவல்
கனியாமூரில் மரநாய் மீட்பு



கள்ளக்குறிச்சி : கனியாமூரில் சுற்றி திரிந்த மரநாயினை வனத்துறை அலுவலர்கள் பாதுகாப்பாக மீட்டு காப்புகாட்டில் விட்டனர்.

சின்னசேலம் அடுத்த கனியாமூர் கிராமத்தை சேர்ந்த பழனிவேல் மகன் விஜயகுமார் என்பவரது விளைநிலத்தில் அரியவகை விலங்கினம் சுற்றி திரிந்துள்ளது. கோழி கூண்டிற்குள் விலங்கு இருந்த நிலையில், விஜயகுமார் கூண்டினை பூட்டிவிட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.அதன்பேரில், கச்சிராயபாளையம் வனவர் சின்னதுரை தலைமையில் வனகாப்பாளர்கள் ஞானசேகர், மணிகண்டன், செல்வராஜ், அக்சயசாமி, வனகாவலர் சுரேஷ் ஆகியோர் கனியாமூருக்கு சென்று பார்த்தனர்.
கூண்டில், கருப்பு நிறத்தில் 3 வயது மதிக்கத்தக்க, ஆண் மரநாய் இருந்தது தெரிந்தது. உடன் வலை மூலம் மரநாயை பத்திரமாக பிடித்து, கோட்டாலம் காப்புகாட்டில் விட்டனர்.அழிந்து கொண்டிருக்கும் விலங்குகள் பட்டியலில் மரநாய் இனமும் உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X