அதீத இணைய பயன்பாட்டால் கற்றலில் கவன சிதறல்: மனநல டாக்டர் எச்சரிக்கை

Added : செப் 19, 2022 | |
Advertisement
நாமக்கல்: ''அதீத இணைய பயன்பாட்டால், மன உளைச்சலுக்கு ஆளாவதுடன், கற்றலில் கவனச்சிதறலும் ஏற்படும்,'' என்று மனநல டாக்டர் ஜெயந்தி பேசினார். நாமக்கல் மாவட்ட மனநலத் திட்டத்தின் சார்பில், எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மொபைல்போன் அதீத பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் செல்வராஜ் தலைமை


நாமக்கல்: ''அதீத இணைய பயன்பாட்டால், மன உளைச்சலுக்கு ஆளாவதுடன், கற்றலில் கவனச்சிதறலும் ஏற்படும்,'' என்று மனநல டாக்டர் ஜெயந்தி பேசினார்.
நாமக்கல் மாவட்ட மனநலத் திட்டத்தின் சார்பில், எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மொபைல்போன் அதீத பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் செல்வராஜ் தலைமை வகித்தார். இதில் மனநல டாக்டர் ஜெயந்தி பங்கேற்று பேசியதாவது: அதீத இணைய பயன்பாடு, மொபைல் போன், கணினி மற்றும் மின்னணு விளையாட்டு சாதனங்கள் (வீடியோ கேம்ஸ்) அதிக நேரம் பயன்படுத்துவதைக் குறிப்பது. ஒரு நாளில், இரண்டு மணி நேரத்துக்கு மேல், இணைய பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். அதனால், வேலை அல்லது படிப்பு பாதிப்பு அடையும். யாராவது, அதிகமான இணைய பயன்பாட்டை சுட்டிக்காட்டினால், அவர்கள் மீது எரிச்சல், கோபம் வரும். இணைய பயன்பாடு, உங்கள் வாழ்க்கையில் மற்ற செயல்பாடுகளைக் குறைத்து விடும்.
அதீத இணைய பயன்பாடு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றால், குறிப்பிட்ட நேரத்தைத் தாண்டி இணையப் பயன்பாடு செல்லும்போது, அதைக் குறைக்க முடியாமல், மன உளைச்சலுக்கு ஆளாவது. கற்றலில் கவனச் சிதறல் ஏற்படும். அன்றாட வாழ்க்கைப் பிரச்னைகளை, நேருக்கு நேர் எதிர்கொள்வதற்கு மாறாக, மெய் நிகர் உலகில் எதிர்கொள்ளும் ஒரு மனநிலை ஏற்படும். அதிக மன அழுத்தம், மனச்சோர்வு, பதட்டம், தனிமையுணர்வு ஆகிய உணர்வுகளில் இருந்து விடுபட முடியாத நிலைக்கு தள்ளப்படுவர்.
இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X