ஓட்டுச்சாவடி பிரிப்பு ஆலோசனைக் கூட்டம்

Added : செப் 19, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில், சட்டசபை தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் 1,500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடிகளை இரண்டாக பிரிப்பது குறித்து அனைத்து கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.ஆர்.டி.ஓ., பவித்ரா தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சியில் நகரம், உதயமாம்பட்டு ஆகிய ஓட்டுச்சாவடி மையங்கள் பிரிக்கப்பட்டது.அத்துடன் நகர பகுதியில் ஓட்டுச்சாவடி
ஓட்டுச்சாவடி பிரிப்பு ஆலோசனைக்  கூட்டம்



கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில், சட்டசபை தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் 1,500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடிகளை இரண்டாக பிரிப்பது குறித்து அனைத்து கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
ஆர்.டி.ஓ., பவித்ரா தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சியில் நகரம், உதயமாம்பட்டு ஆகிய ஓட்டுச்சாவடி மையங்கள் பிரிக்கப்பட்டது.அத்துடன் நகர பகுதியில் ஓட்டுச்சாவடி மையங்களாக இயங்கி வந்த 22 பழைய பள்ளி கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டதால், அதற்கு அருகாமையில் உள்ள ஓட்டுச்சாவடிக்கு மற்றும் பணி குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில், ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் பன்னீர்செல்வம், தேர்தல் தனி தாசில்தார் கோவிந்தராஜ், தாசில்தார்கள் சத்தியநாராயணன், சரவணன் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.வருவாய் ஆய்வாளர் ராமசாமி நன்றி கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X