சிறுமியை நாசம் செய்த வழக்கு: இன்று அளிக்கப்படவிருந்த தீர்ப்பு ஒத்திவைப்பு

Updated : செப் 19, 2022 | Added : செப் 19, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
சென்னை-சென்னையில், 13 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, நாசம் செய்த வழக்கில், நீதிபதி ராஜலட்சுமி உடல்நலக்குறைவால் விடுப்பில் சென்றுள்ளதால் இன்று வழங்கப்படவிருந்த தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பெண் ஒருவர், 2020ல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தன், 13 வயது மகளை, தன் அக்கா மகளும், அவரது கணவரும்
Chennai,Pocso act, போக்சோ, சிறுமி, தீர்ப்பு, சென்னை,  JUDGMENT,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை-சென்னையில், 13 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, நாசம் செய்த வழக்கில், நீதிபதி ராஜலட்சுமி உடல்நலக்குறைவால் விடுப்பில் சென்றுள்ளதால் இன்று வழங்கப்படவிருந்த தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பெண் ஒருவர், 2020ல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தன், 13 வயது மகளை, தன் அக்கா மகளும், அவரது கணவரும் சேர்ந்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, வன்கொடுமை செய்ததாக கூறியிருந்தார்.இச்சம்பவம் குறித்து, வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


latest tamil news



சிறுமியின் உறவினர்கள், எண்ணுார் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் புகழேந்தி, 45, பா.ஜ., வட சென்னை மாவட்ட பிரமுகர் ராஜேந்திரன், 44, உட்பட 26 பேர் மீது, பாலியல் வன்முறை தொடர்பான, 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.குற்றம் சாட்டப்பட்ட, 26 பேரில், 22 பேரை, போலீசார் அடுத்தடுத்து கைது செய்து, சிறையில் அடைத்தனர்; நான்கு பேர் தலைமறைவாகினர். மீதமுள்ள, 22 பேர் மீதான வழக்கு விசாரணை, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி முன் நடந்து வந்தது.

விசாரணையின் போது, ஒருவர் இறந்தார்.அனைத்து தரப்பு வாதங்களுக்கு பின், இந்த வழக்கில், சிறுமியின் உறவினர்கள், எண்ணுார் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, பா.ஜ., வடசென்னை மாவட்ட பிரமுகர் ராஜேந்திரன் உட்பட, 21 பேரும் குற்றவாளிகள் என, நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த நிலையில்,இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த முக்கிய வழக்கில், 21 குற்றவாளிகளும் இன்று(செப்.,19) போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தீர்ப்பு அளிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.


தீர்ப்பு ஒத்திவைப்பு:


இந்நிலையில், நீதிபதி ராஜலட்சுமி உடல்நலக்குறைவால் விடுப்பில் சென்றுள்ளதால் இன்று வழங்கப்படவிருந்த தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அடுத்தவாரம் தண்டனை அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-செப்-202204:25:26 IST Report Abuse
ஷ்யாம் இந்த கயவர்களை கொல்ல க்கூடாது, சிறையில் பட்டினியிட்டு சாகடிக்க வேண்டும்...
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
19-செப்-202223:45:21 IST Report Abuse
Ramesh Sargam நீதிபதி ராஜலட்சுமி உடல்நலக்குறைவால் விடுப்பில் சென்றுள்ளாரா அல்லது அவரை விடுப்பில் செல்ல சொல்லி அரசிலிருந்து ஏதாவது அழுத்தமா...? எங்கோ ஏதோ தவறு நடப்பதாக தெரிகிறது...
Rate this:
Cancel
மண்டகசாயம் - மார்த்தாண்டம்,இந்தியா
19-செப்-202222:37:29 IST Report Abuse
மண்டகசாயம் பாஜ வட சென்னை மாவட்ட பிரமுகர் ராஜேந்திரன்,சபாஷ் நாம இல்லாமலா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X