அக்கம் பக்கம் ஈரோடு

Added : செப் 19, 2022 | |
Advertisement
'ஒரு மாத சம்பளம் போனஸ்'ரேசன் கடை ஊழியர் ஆவல்கோபி, செப். ௧௯-தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தின், ஈரோடு மாவட்ட செயற்குழு கூட்டம், கோபியில் நேற்று நடந்தது.மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் சதாசிவம் முன்னிலை வகித்தார். ரேசன் கடைகளுக்கு தனித்துறை ஏற்படுத்த வேண்டும். கூடுதல் பதிவாளர் சக்தி சரவணன் அறிக்கையில், அரசாணை எண்ணில்

'ஒரு மாத சம்பளம் போனஸ்'
ரேசன் கடை ஊழியர் ஆவல்
கோபி, செப். ௧௯-
தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தின், ஈரோடு மாவட்ட செயற்குழு கூட்டம், கோபியில் நேற்று நடந்தது.
மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் சதாசிவம் முன்னிலை வகித்தார். ரேசன் கடைகளுக்கு தனித்துறை ஏற்படுத்த வேண்டும். கூடுதல் பதிவாளர் சக்தி சரவணன் அறிக்கையில், அரசாணை எண்ணில் பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரைகளை, விரைந்து அமல்படுத்த வேண்டும். மாநில பதிவாளரால் அறிவிக்கப்பட்ட தேர்வு நிலை, சிறப்பு நிலை குறித்து, கமிட்டி அறிக்கை வெளியிட வேண்டும். ரேசன் கடை பணியாளருக்கு ஒரு மாத சம்பளத்தை, தீபாவளி போனசாக வழங்க வேண்டும். நுகர்பொருள் வாணிப கிடங்கு நகர்வு பணியாளர், ரேசன் கடை பணியாளர்களுக்கு, ஒரே மாதிரியான வேலை நேரம் அமைக்க கோரியும் தீர்மானம் நிறைவேற்றினர்.
ஆற்று சுழலில் சிக்கி பலி
பர்கூர் வாலிபர் உடல் மீட்பு
அந்தியூர், செப். 19-
அந்தியூரை அடுத்த பர்கூர் மலை, ஊசி மலையை சேர்ந்தவர் சசிகுமார், 22; ஜே.சி.பி., ஆப்பரேட்டர். ஊசிமலையை சேர்ந்த நண்பர் கவின்குமாருடன், அத்தாணி, சவுண்டபூர் பாலம் பகுதியில், பவானி ஆற்றில் குளிக்க நேற்று முன்தினம் மாலை சென்றார். நீச்சல் தெரியாத நிலையில், சுழலில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டார். தகவல் கிடைத்து அந்தியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், ஆப்பக்கூடல் போலீசார் சென்றனர். சசிகுமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவானதால் பணியை கைவிட்டனர். நேற்று காலை மீண்டும் சசிக்குமாரை தேடும் பணியில் அந்தியூர், கோபி தீயணைப்பு துறையினர், மீனவர்கள் ஈடுபட்டனர். இதில் மாலையில் சசிக்குமாரின் உடலை மீட்டனர். சசிகுமார் சிக்கிய இடத்தில், எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. அதை மீறி குளித்தபோது சுழலில் சிக்கி இறந்து விட்டதாக, போலீசார் தெரிவித்தனர்.
பெண்ணிடம் பறித்த பணம்
சைபர் கிரைம் போலீஸ் மீட்பு
ஈரோடு, செப். 19-
ஈரோடு, சின்னியம்பாளையத்தை சேர்ந்த, 40 வயது பெண் மொபைல் எண்ணுக்கு, 'குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம்' என குறுந்தகவல் வந்தது. இதை நம்பி மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு பேசினார். மறுமுனையில் பேசிய ஆசாமி குறைந்த முதலீடு செய்தால் சில மாதங்களில் நிறைய லாபம் பெறலாம் என கூறியுள்ளான். இதை நம்பி முதற்கட்டமாக, 50 ஆயிரம் ரூபாய், இரண்டாம் கட்டமாக, 32 ஆயிரம் ரூபாய் அனுப்பினார். ஆனால், ௧௪ ஆயிரம் ரூபாய் மட்டுமே தந்தனர். கூறியபடி லாபத்தை தராமல், அனுப்பிய பணத்தையும் கொடுக்காமல் ஏமாற்றினர். இதுகுறித்து ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார். விசாரணையில் மர்ம ஆசாமியின் வங்கி கணக்கு ஆந்திராவில் உள்ளதை கண்டுபிடித்தனர். வங்கி கணக்கை முடக்கி, 68 ஆயிரம் ரூபாயை மீட்டு, பெண்ணின் வங்கி கணக்கில் செலுத்தினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X