வயல்களில் விவசாயப்பணி தீவிரம்

Added : செப் 19, 2022 | |
Advertisement
புவனகிரி:கீரப்பாளையம் வட்டாரத்தின் சுற்றுபகுதிகளில் வயலில் ஏர் உழுது, சாணம் எரு தெளித்து விதை நேர்த்திப் பணியில் விவசாயிகள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். மேட்டூரில் தண்ணீர் திறக்பட்டுள்ள நிலையில் தற்போது வீரானம் ஏரி கொள்ளவை எட்டியுள்ளது. சேத்தியாத்தோப்பு வாலாஜா ஏரியில் தண்ணீர் தேக்கி பொதுப்பணித்துறையினர் கண்காணித்து வருகின்றனர். விரைவில் கிளை பாசன

புவனகிரி:கீரப்பாளையம் வட்டாரத்தின் சுற்றுபகுதிகளில் வயலில் ஏர் உழுது, சாணம் எரு தெளித்து விதை நேர்த்திப் பணியில் விவசாயிகள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். மேட்டூரில் தண்ணீர் திறக்பட்டுள்ள நிலையில் தற்போது வீரானம் ஏரி கொள்ளவை எட்டியுள்ளது. சேத்தியாத்தோப்பு வாலாஜா ஏரியில் தண்ணீர் தேக்கி பொதுப்பணித்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
விரைவில் கிளை பாசன வாய்க்கால்களில் விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. கீரப்பாளையம் மற்றும் புவனகிரி வட்டார சுற்று பகுதியில் சமீபத்தில் பெய்த மழையில் மண்ணின் தன்மை மாறியுள்ளது. வேளாண் துறை வழிகாட்டுதலுடன் சம்பா சாகுபடி பணிகளை மேற்கொள்ள புவனகிரி மற்றும் கீரப்பாளையம் ஒன்றிய கிராங்களில் விவசாயிகள் ஆயத்தமாக உள்ளனர்.
வயல்களில் இயற்கை உரத்திற்காக கால்நடைகள் மூலம் கிடை கட்டி சாணம் தெளித்துள்ளனர். மேலும் வீட்டில் தேக்கி வைக்கப்பட்டிருந்த இயற்கை உரங்களை வண்டிகள் மூலம் வயலில் கொட்டி, கூலியாட்கள் மூலம் தெளித்து, டிராக்டர் கொண்டு ஏர் உழுது, நேரடி விதை நேர்த்தி செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரம் செலுத்தி வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X