தூக்கு தண்டனை வழக்குகள்: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

Updated : செப் 19, 2022 | Added : செப் 19, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி : துாக்கு தண்டனை விதிக்கப்படும் வழக்குகளில் எவ்வித சூழ்நிலைகளில் தண்டனை குறைப்பை பரிசீலிக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்கள் வகுக்க கோரிய வழக்கு, 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.துாக்கு தண்டனை விதிக்கப்பட கூடிய சாத்தியக்கூறுகள் உள்ள வழக்குகளில், விசாரணையின் போதே குற்றவாளிக்கு தண்டனை குறைப்பு பெற்றுத்தரக் கூடிய
துாக்கு தண்டனை,வழக்கு  அரசியல் ,சாசன அமர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : துாக்கு தண்டனை விதிக்கப்படும் வழக்குகளில் எவ்வித சூழ்நிலைகளில் தண்டனை குறைப்பை பரிசீலிக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்கள் வகுக்க கோரிய வழக்கு, 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

துாக்கு தண்டனை விதிக்கப்பட கூடிய சாத்தியக்கூறுகள் உள்ள வழக்குகளில், விசாரணையின் போதே குற்றவாளிக்கு தண்டனை குறைப்பு பெற்றுத்தரக் கூடிய வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாகவே உள்ளது.இந்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கில் வாதங்களை கேட்ட நீதிபதி ரவீந்திர பட், இறுதி தீர்ப்பை தலைமை நீதிபதி அளிப்பார் என, சமீபத்தில் உத்தரவிட்டார்.


latest tamil news



வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி யு.யு.லலித், ''அதிகபட்சமாக மரண தண்டனையை எதிர்நோக்கும் குற்றவாளியின் தண்டனை குறைப்பு குறித்து எவ்வித சூழ்நிலைகளில் பரிசீலிக்க வேண்டும் என்பதை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கினால் தான் சரியாக இருக்கும்,'' என உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mahesh - New Jersey,யூ.எஸ்.ஏ
20-செப்-202204:46:12 IST Report Abuse
Mahesh கற்பழிப்பு மற்றும் கொலை போன்றவற்றில் கூட தூக்கு கிடையாது என்பது போன்றதொரு தோற்றம் தருவது குற்றங்களை குறைக்க உதவாது. மேலும் சட்டப்படி நடக்கும் மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X