சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

என்ன விதமான அரசியல் இது?

Added : செப் 19, 2022 | |
Advertisement
என்ன விதமான அரசியல் இது?'ஒட்டும் வேண்டாம்; உறவும் வேண்டாம் என உதறித் தள்ளிய குலாம் நபி ஆசாத்தை, மீண்டும் மீண்டும் அழைத்து, எதற்கு அவமானப்படுத்த வேண்டும்...' என, ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்புகின்றனர், டில்லியில் உள்ள அரசியல்வாதிகள்.குலாம் நபி ஆசாத், காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர். ஜம்மு - காஷ்மீர் முதல்வர், மத்திய அமைச்சர், ராஜ்யசபா

அக்கம் பக்கம்


என்ன விதமான அரசியல் இது?



'ஒட்டும் வேண்டாம்; உறவும் வேண்டாம் என உதறித் தள்ளிய குலாம் நபி ஆசாத்தை, மீண்டும் மீண்டும் அழைத்து, எதற்கு அவமானப்படுத்த வேண்டும்...' என, ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்புகின்றனர், டில்லியில் உள்ள அரசியல்வாதிகள்.குலாம் நபி ஆசாத், காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர். ஜம்மு - காஷ்மீர் முதல்வர், மத்திய அமைச்சர், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் உட்பட, பல முக்கிய பதவிகளை வகித்தவர்.
காங்கிரசில், ராகுலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக போர்க்கொடி துாக்கிய குலாம் நபி ஆசாத், தொடர்ந்து கட்சி மேலிடத்தின் நடவடிக்கைகளை விமர்சித்தார். இதனால், கட்சியிலிருந்து ஓரம் கட்டப்பட்ட அவர், சமீபத்தில் அடிப்படை உறுப்பினர் உட்பட கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். தனிக்கட்சி துவங்குவதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார்.
இதனால், காஷ்மீரில் காங்கிரஸ் காணாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, காங்., மூத்த நிர்வாகிகள் சிலர், அவருடன் மீண்டும் சமாதானம் பேச முயற்சித்து வருகின்றனர். ஆனால், கட்சியில் இருந்து விலகும் போது, சோனியாவுக்கு அனுப்பிய ராஜினாமா கடிதத்தை, காங்., மூத்த நிர்வாகிகளுக்கு, 'வாட்ஸ் ஆப்'பில் அனுப்பி, தன் முடிவில் உறுதியாக இருப்பதை மறைமுகமாக தெரிவித்து வருகிறார், குலாம் நபி ஆசாத்.
இதையறிந்த அவரது ஆதரவாளர்கள், 'கட்சியில் இருக்கும் போது அவமானப் படுத்துவதும், கட்சியை விட்டு விலகிய பின் கெஞ்சுவதும், என்ன விதமான அரசியல் என தெரியவில்லை...' என, கோபத்தில் குமுறுகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X