ஆளுங்கட்சியினர் வாகனத்தில் உலா வரும் அதிகாரி!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

ஆளுங்கட்சியினர் வாகனத்தில் உலா வரும் அதிகாரி!

Added : செப் 19, 2022 | |
ஆளுங்கட்சியினர் வாகனத்தில் உலா வரும் அதிகாரி!''முதல்வர் பாணியை பின்பற்றியதை, யாரும் ரசிக்கலை ஓய்...'' என, பில்டர் காபியை உறிஞ்சியபடியே பேச்சை ஆரம்பித்தார் குப்பண்ணா.''நல்ல விஷயமா இருந்தா தப்பில்லையே பா...'' என்றார், அன்வர்பாய்.''முழுசா கேளும்... துவக்க பள்ளிகள்ல, காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின், சமீபத்துல மதுரையில துவக்கி

 டீ கடை பெஞ்ச்


ஆளுங்கட்சியினர் வாகனத்தில் உலா வரும் அதிகாரி!''முதல்வர் பாணியை பின்பற்றியதை, யாரும் ரசிக்கலை ஓய்...'' என, பில்டர் காபியை உறிஞ்சியபடியே பேச்சை ஆரம்பித்தார் குப்பண்ணா.

''நல்ல விஷயமா இருந்தா தப்பில்லையே பா...'' என்றார், அன்வர்பாய்.

''முழுசா கேளும்... துவக்க பள்ளிகள்ல, காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின், சமீபத்துல மதுரையில துவக்கி வச்சாரோல்லியோ... அப்ப, குழந்தைகளோட அவரும் தரையில உட்கார்ந்து சாப்பிட்டு, அவாளுக்கு ஊட்டியும் விட்டார் ஓய்...

''மறுநாள் இந்த திட்டத்தை, மாநிலம் முழுக்க அமைச்சர்கள் துவக்கி வச்சா... அவாளும், சொல்லி வச்சா மாதிரி, குழந்தைகளோட தரையில உட்கார்ந்து, அவாளுக்கு ஊட்டி விடற மாதிரி போஸ் குடுத்து, தங்களை விளம்பரப்படுத்திண்டா ஓய்...

''முதல்வர் மாதிரியே எல்லாரும் செயல்பட்டதை, கட்சியின் மூத்த தொண்டர்கள் பலரும் விரும்பலையாம்... முதல்வர் தரப்புல கூட, அமைச்சர்களின் செயல்பாட்டை ரசிக்கலைன்னு, கோட்டை வட்டாரத்துல முணுமுணுத்துண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''முக்கியமான வேலைக்கு ஆள் எடுக்கிறப்ப, தகுதி, திறமை எல்லாம் பார்க்கணுமா, வேண்டாமா வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''கண்டிப்பா பார்க்கணும் பா...'' என்றார், அன்வர்பாய்.

''திருப்பூர் மாநகர போலீஸ்ல, ஐ.எஸ்.,ன்னு சொல்ற நுண்ணறிவு பிரிவுல, நாலு வருஷத்துக்கும் மேலா இருந்தவங்களை சமீபத்துல மாத்திட்டு புது ஆட்களை போட்டாவ...

''இதுல, உயர் அதிகாரி வீட்டுல ஆர்டர்லி வேலை பார்த்தவர், போலீஸ் வாகன டிரைவர், ஆபீஸ் பணியில இருந்தவர், அமைச்சர் சிபாரிசுல வந்தவர், கஞ்சா வழக்குல சிக்குனவரை எல்லாம், ஐ.எஸ்., பிரிவுக்கு எடுத்திருக்காவ வே...

''அதுவும் இல்லாம, சிலர் உயர் அதிகாரிகளை பார்த்து, லட்சங்கள்ல பேரம் நடத்தியும், இந்த பணியிடங்களுக்கு வந்திருக்காவ... 'வெளி மாநிலத்தவர், வெளிநாட்டினர் அதிகம் புழங்குற திருப்பூர்ல, முக்கியமான ஐ.எஸ்., பிரிவு முழுக்க முழுக்க பணமயமாகிட்டு இருக்கு...

'எந்த அனுபவமும் இல்லாத போலீசாரை, இந்தப் பிரிவுக்கு நியமிக்கிறது கமிஷனருக்கு தெரியுமா'ன்னு, நியாயமான போலீசார் பலரும் புலம்பிட்டு இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''ஆளுங்கட்சியினர் வாகனத்துல தான் வலம் வர்றாரு பா...'' என, கடைசி மேட்டருக்கு வந்தார் அன்வர்பாய்.

''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''நீலகிரி மாவட்டம், குன்னுார் நகராட்சி அதிகாரி ஒருத்தர், தி.மு.க., ஆட்சிக்கு வந்த புதுசுல இங்க வந்தாரு... உள்ளாட்சி தேர்தல் முடிஞ்சு, தி.மு.க.,வினர் பதவிக்கு வந்த பின், அவங்களோட பசை மாதிரி ஒட்டிக்கிட்டாரு பா...

''ஆளுங்கட்சி நகர செயலர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் வாகனங்கள்ல தான் அதிகாரி பெரும்பாலும் வலம் வர்றாரு... கட்டுமான திட்டங்களுக்கான அனுமதியை எல்லாம், ஆளுங்கட்சியினர் சொல்றவங்களுக்கு தான் குடுக்கிறாரு பா...

''அதிகாரிக்கு அரசு குடுத்திருக்கிற பங்களாவுல, அபாயகரமா இருக்குன்னு சொல்லி பல மரங்களை வெட்டி, காலி பண்ணிட்டாரு... இவரை பற்றி, உள்ளாட்சி துறை மேலிடம் வரைக்கும் புகார்கள் போயிருக்குது பா...'' என முடித்தார், அன்வர்பாய்.

''வாரும், கிருஷ்ணமூர்த்தி நன்னா மெலிஞ்சுட்டீரே... 'டயட்'ல இருக்கீரா என்ன...'' என, நண்பரிடம் நலம் விசாரித்தபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X