வாலிநோக்கம் முஸ்லிம் ஜமாத் தேர்தல் நடத்த வலியுறுத்தல்

Added : செப் 19, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
ராமநாதபுரம் : கடலாடி தாலுகா வாலிநோக்கம் முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் தேர்தல் நடத்த வேண்டும், என மக்கள் வலியுறுத்தினர்.ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் குறைதீர் முகாமில் வாலிநோக்கம் மக்கள் பேரவை தலைவர் சாகுல் ஹமீது தலைமையில் முஸ்லிம் ஜமாத்தேர்தல் நடத்தக்கோரி மனு அளித்தனர். அதில் கூறியிருப்பது:வாலிநோக்கம் முஸ்லிம் ஜமாத் நிர்வாகத்திற்கு 2014ல் தேர்தல் நடந்தது. 2017 வரை
வாலிநோக்கம் முஸ்லிம் ஜமாத் தேர்தல் நடத்த வலியுறுத்தல்

ராமநாதபுரம் : கடலாடி தாலுகா வாலிநோக்கம் முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் தேர்தல் நடத்த வேண்டும், என மக்கள் வலியுறுத்தினர்.

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் குறைதீர் முகாமில் வாலிநோக்கம் மக்கள் பேரவை தலைவர் சாகுல் ஹமீது தலைமையில் முஸ்லிம் ஜமாத்தேர்தல் நடத்தக்கோரி மனு அளித்தனர். அதில் கூறியிருப்பது:வாலிநோக்கம் முஸ்லிம் ஜமாத் நிர்வாகத்திற்கு 2014ல் தேர்தல் நடந்தது. 2017 வரை அதாவது மூன்றாண்டுகள் ஒப்புதல் வழங்கியது. தற்போது கூடுதலாக 5 ஆண்டுகள் ஆகிவிட்டது.

பதவி காலம் காலாவதியான ஜமாத்திற்கு பதவி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதா, என தெரியவில்லை.எனவே, ஜமாத்தின் பொறுப்புகளை வக்பு போர்டு கையகப்படுத்தி, நிர்வாகம் செய்வது நடைமுறையாகும்.ஜமாத் நிலத்தை பாதுகாக்க தமிழ்நாடு வக்பு வாரியம் நேரடி கட்டுப்பாட்டில் எடுத்து தேர்தல் நடத்த வேண்டும். அதற்கு ராமநாதபுரம் கலெக்டர், வக்பு வாரிய முதன்மை செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறியுள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
20-செப்-202212:06:35 IST Report Abuse
jayvee ஜமாத் என்பதே ஒரு கட்ட பஞ்சாயத்து.. இதை நீதிமன்றங்கள் அங்கீகரிக்க கூடாது.. UCC வந்துவிட்டால் ஜமாத்துகள் காணாமல் போய்விடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X