புது மாடலில் 'வாட்டர் ஹீட்டர்' 'வீனஸ்' நிறுவனம் அறிமுகம்

Added : செப் 19, 2022 | |
Advertisement
சென்னை, :'வீனஸ்' வீட்டு உபயோகப் பொருட்கள் நிறுவனம், 60வது ஆண்டு விழாவை முன்னிட்டு, 'இன்ஸ்டன்ட் அண்டு ஸ்டோரேஜ் வாட்டர் ஹீட்டர்'களை அறிமுகம் செய்துள்ளது.வீனஸ் நிறுவனம் செய்திக் குறிப்பு:வீனஸ் வீட்டு உபயோகப் பொருட்கள் நிறுவனம், வாட்டர் ஹீட்டர் தொழில் துறையில் பிரபலமாகவும், முன்னணியிலும் உள்ளது. வெளிநாடுகளுக்கு வாட்டர் ஹீட்டர்களை ஏற்றுமதி செய்கிறது.சமீபத்தில்,
புது மாடலில் 'வாட்டர் ஹீட்டர்' 'வீனஸ்' நிறுவனம் அறிமுகம்

சென்னை, :'வீனஸ்' வீட்டு உபயோகப் பொருட்கள் நிறுவனம், 60வது ஆண்டு விழாவை முன்னிட்டு, 'இன்ஸ்டன்ட் அண்டு ஸ்டோரேஜ் வாட்டர் ஹீட்டர்'களை அறிமுகம் செய்துள்ளது.வீனஸ் நிறுவனம் செய்திக் குறிப்பு:வீனஸ் வீட்டு உபயோகப் பொருட்கள் நிறுவனம், வாட்டர் ஹீட்டர் தொழில் துறையில் பிரபலமாகவும், முன்னணியிலும் உள்ளது. வெளிநாடுகளுக்கு வாட்டர் ஹீட்டர்களை ஏற்றுமதி செய்கிறது.சமீபத்தில், மின் விசிறி மற்றும் சிறிய ரக மின் சாதனங்கள் தயாரிப்பிலும் இறங்கி உள்ளது.

நீடித்து உழைக்கும், துருப்பிடிக்காத மற்றும் கடின நீரை தாக்குப் பிடிக்கும் திறன் உடைய ஹீட்டர்களை, வீனஸ் நிறுவனம் அறிமுகம் செய்கிறது.நிறுவனத்தின் 60வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், இரண்டு 'ஸ்டோரேஜ்' மற்றும் இரண்டு 'இன்ஸ்டன்ட் வாட்டர் ஹீட்டர்'கள் என, நான்கு புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.புதிய அறிமுகமான 'ஸ்பிளாஷ் புரோ மாடல்'கள் அனைத்தும், 'செராமிக் எலிமென்டு'கள் உடைய, 'ஸ்கேல் கார்டு' தொழில்நுட்பம் மற்றும் கடின நீரிலிருந்து பாதுகாத்து, துருப்பிடிக்காமல் இருக்க ஐந்து தன்மைகளை கொண்டுஉள்ளது.'ஸ்கேல் கார்டு' தொழில்நுட்பம் வழக்கமான வாட்டர் ஹீட்டர்களை விட, 10 சதவீதம் கூடுதலாக வெந்நீரை வழங்கும் திறன் உடையது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X