பஞ்சாப் முதல்வரால், ஆம் ஆத்மிக்கு தலைகுனிவு!

Updated : செப் 21, 2022 | Added : செப் 19, 2022 | கருத்துகள் (39+ 15) | |
Advertisement
பஞ்சாப் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவருமான பகவந்த் மான், ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரிலிருந்து, புதுடில்லிக்கு திரும்புவதற்காக, 'லுப்தான்சா' விமானத்தில் ஏறியபோது, நிற்கக் கூட முடியாமல் தள்ளாடும் அளவுக்கு குடி போதையில் இருந்ததாககூறப்படுகிறது. இவ்வளவு போதையில் உள்ள நபர் விமானத்தில் பயணிக்க விதிமுறைகள் அனுமதிக்காததால், அவர் இறக்கி விடப்பட்டதாகவும்
 பஞ்சாப் முதல்வர் ,பகவந்த் சிங் மானால், தலைகுனிவு!

பஞ்சாப் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவருமான பகவந்த் மான், ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரிலிருந்து, புதுடில்லிக்கு திரும்புவதற்காக, 'லுப்தான்சா' விமானத்தில் ஏறியபோது, நிற்கக் கூட முடியாமல் தள்ளாடும் அளவுக்கு குடி போதையில் இருந்ததாக
கூறப்படுகிறது. இவ்வளவு போதையில் உள்ள நபர் விமானத்தில் பயணிக்க விதிமுறைகள் அனுமதிக்காததால், அவர் இறக்கி விடப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம், ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும், 'அவர் முதல்வர் பதவியில் இருந்து விலக மாட்டார்' என, கட்சியினர் தெரிவித்தனர்.

புதுடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் நடந்த பஞ்சாப் சட்டசபை தேர்தலிலும் இக்கட்சி அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இக்கட்சியைச் சேர்ந்தவரும், நகைச்சுவை பேச்சாளருமான பகவந்த் மான், முதல்வராக பதவி ஏற்றார்.


சலசலப்புஇந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய மாநாடு புதுடில்லியில் நேற்று முன்தினம் நடந்தது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அக்கட்சி எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட, ஏராளமானோர் பங்கேற்றனர்.புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துவங்கி, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் மேடையில் அமர்ந்திருந்தனர். இதில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மட்டும் இல்லாததை, பலரும் கவனித்தனர்.

இது குறித்து விசாரித்தபோது, அவர் வெளிநாடு சென்றிருப்பதால் வரமுடியவில்லை எனக் கூறப்பட்டது. ஆனால், இந்த விவகாரம் தற்போது வேறு மாதிரியாக திரும்பிஉள்ளது. புதுடில்லியில், தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கடந்த 11ம் தேதி, ஐரோப்பிய நாடானஜெர்மனி சென்றார். அவருடன் அவரது மனைவி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் சென்றனர். பயணத்தை முடித்து, திட்டமிட்டபடி நேற்று முன்தினம் அதிகாலையில், டில்லிக்கு வந்திருக்க வேண்டும்.ஆனால், அவர் விமானத்தை தவற விட்டதால், டில்லி வந்து சேர முடியவில்லை என்று கூறப்பட்டது. ஆனால், உண்மையில் நடந்தது வேறு. பிராங்பர்ட் விமான நிலையத்திற்கு வந்த முதல்வர் பகவந்த் மான், லுப்தான்சா விமானத்தில் ஏறி உள்ளார். அப்போது சக பயணியர் மத்தியில், ஏதோ சலசலப்புஏற்பட்டுள்ளது.


அச்சுறுத்தல்காரணம், வெள்ளை குர்தா - பைஜாமாவில், கால்கள் தள்ளாட, நடக்கக் கூட முடியாத குடிபோதையில் முதல்வர் பகவந்த் மான், தன் இருக்கையில் அமர்ந்துள்ளார். இதை பார்த்த விமான ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.தள்ளாடும் போதையில் வருபவர், இதர பயணியரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக் கூடும் என்பதாலும், அது குறித்து இதர பயணியர் புகார் அளித்தால், அது விமான நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் என்பதாலும், முதல்வர் பகவந்த் மானிடம் பேசிய விமான ஊழியர்கள், அவர் பயணத்தை தொடர அனுமதிக்க முடியாது எனதெரிவித்தனர்.அவரை விமானத்தில் இருந்து இறங்கவும் அறிவுறுத்தினர்.

இரு தரப்பும் மாறி மாறி சில நிமிடங்கள் பேசிய பின், முதல்வர் மற்றும் அவருடன் வந்த நான்கைந்து பேர், விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டனர். விமானத்தின் சரக்கு பெட்டகத்துக்கு அனுப்பப்பட்ட அவர்களது, 'லக்கேஜ்'களை திரும்ப எடுப்பதில் ஏற்பட்ட சிக்கலால்,
அந்த விமானம் புறப்படுவதில், நான்கு மணி நேரத்திற்கும் மேல் தாமதம் ஏற்பட்டது. இதனால் சக பயணியர், விமான அலுவலர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒட்டுமொத்த விவகாரமும், அங்குள்ள இந்திய துாதரகத்துக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விமான நிலையத்துக்கு கார்களை அனுப்பி, பஞ்சாப் முதல்வரையும், அதிகாரிகளையும் பாதுகாப்பாக அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டன.


பின், வேறு விமானத்தில் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் பின்னரே, பஞ்சாப் முதல்வர் டில்லிக்கு வர முடிந்தது. இதனால் தான் அவரால், புதுடில்லியில் நடந்த ஆம் ஆத்மி தேசிய மாநாட்டில் பங்கேற்க முடியவில்லை.இவ்வாறு டில்லி வட்டாரங்கள் தெரிவித்தன.இந்த சம்பவம், ஆத் ஆத்மி கட்சியினருக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.

வெட்கக்கேடு


இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:பஞ்சாப் முதல்வர் மான், பெரிய அவமானத்தை ஏற்படுத்தியுள்ளார். நடக்கவே முடியாமல், மனைவியும் பாதுகாவலர்களும் தாங்கிப்பிடித்தபடி முதல்வர் அழைத்து வரப்பட்டார் என்று சக பயணியர் கூறுவது வெட்கக்கேடு.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.விமான நிறுவனம் விளக்கம்'லுப்தான்சா' விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மாற்று விமானம் ஏற்பாடு செய்வதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது. மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக, பயணியரின் தனிப்பட்ட தகவல்கள் குறித்து எதையும் பகிர முடியாது' எனக் குறிப்பிட்டுள்ளது.பகவந்த் மான் பதவி விலக மாட்டார்


பகவந்த் மான் குறித்து வெளியாகி உள்ள இந்த தகவல், ஆம் ஆத்மி கட்சியினரை தர்மசங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது. குறிப்பாக, டில்லி முதல்வரும், கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், கடும் கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ள குஜராத், ஹிமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் கணிசமான இடங்களை வெல்ல திட்டமிட்டு, ஆம் ஆத்மி காய் நகர்த்தி வரும் நிலையில், பகவந்த் மானின் இந்த போதை சம்பவம், கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாக கட்சியினர் கருதுகின்றனர். ஆனாலும், பகவந்த் மான் பதவி விலக மாட்டார் என, கட்சியினர் கூறுகின்றனர். இந்த நேரத்தில் அவரை பதவி விலக நிர்ப்பந்தித்தால், அது கட்சிக்குள் இருக்கும் கருத்து வேறுபாட்டை வெளிச்சம் போட்டு காட்டிவிடும் என, மூத்த தலைவர்கள் கருதுகின்றனர். மேலும், பஞ்சாப் சட்டசபையில் உள்ள 92 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்களில் பெரும்பாலானோர் காங்கிரஸ் மற்றும் அகாலி தளத்தில் இருந்து விலகி ஆம் ஆத்மியில் சேர்ந்தவர்கள். இதில் 40 பேர் பகவந்த் மான் பக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை முதல்வர் பதவியில் இருந்து விலக மான் நிர்ப்பந்திக்கப்பட்டால், காங்., - எம்.எல்.ஏ.,க்கள் 18 பேருடன் கூட்டணி அமைத்து, அவர் மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.


22ல் நம்பிக்கை ஓட்டெடுப்பு


பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்களுக்கு தலா 25 கோடி ரூபாய் பணம் கொடுத்து தங்கள் பக்கம் இழுக்க பா.ஜ., முயற்சித்து வருவதாக ஆம் ஆத்மி தலைவர்கள் சமீபத்தில் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், 'ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்களின் ஒற்றுமையை நிரூபிக்கும் விதமாக, சட்டசபையில் வரும் 22ல் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்படும்' என, முதல்வர் பகவந்த் மான், 'வீடியோ' வாயிலாக நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.


பொய் செய்தி!


திட்டமிட்டபடி, முதல்வர் பகவந்த் மான் நாடு திரும்பினார். ஊடகங்களில் வெளியாகும் அனைத்துமே வதந்திகள். வெளிநாட்டுப் பயணம் வெற்றிகரமாக அமைந்ததை கண்டு அஞ்சும் எதிர்க்கட்சிகள் கிளப்பிவிடும் பொய் செய்திகள் இவை.மல்வீந்தர் சிங்செய்தி தொடர்பாளர், ஆம் ஆத்மிவிளக்கம் வேண்டும்!


போதை காரணமாக, விமானத்திலிருந்து பஞ்சாப் முதல்வர் கீழே இறக்கி விடப்பட்டார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. பஞ்சாப் மக்களின் பெருமையை, பகவந்த் மான் சீர்குலைத்து விட்டார். இதற்கு ஆம் ஆத்மி தலைமை, விளக்கம் அளிக்க வேண்டும்.சுக்பீர் சிங் பாதல்தலைவர், சிரோன்மணி அகாலிதளம்.


- நமது டில்லி நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (39+ 15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
20-செப்-202220:02:41 IST Report Abuse
sankaseshan இதைப்பற்றி எல்லாம் கவலைப்பட மாட்ட்டான் போர்ஜரிவால் தொடைத்து போட்டுட்டு போவான்
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
20-செப்-202218:07:32 IST Report Abuse
Suppan எல்லோருக்கும் தெரியும்.
Rate this:
Cancel
Baskar -  ( Posted via: Dinamalar Android App )
20-செப்-202217:46:58 IST Report Abuse
Baskar பாஜக தான் சொல்லுவார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X