தலைவர் தேர்தலில் போட்டி; சசி தரூருக்கு பச்சைக்கொடி?

Updated : செப் 20, 2022 | Added : செப் 19, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
புதுடில்லி, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட, லோக்சபா எம்.பி., சசி தரூருக்கு, சோனியா சம்மதம் தெரிவித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 'காங்கிரஸ் கட்சியில் சீர்திருத்தம் வேண்டும்' என, கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர் போர்க்கொடி துாக்கினர். இந்த அதிருப்தி குழு தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், சமீபத்தில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து
தலைவர் தேர்தல் ,சசி தரூர், பச்சைக்கொடி?

புதுடில்லி, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட, லோக்சபா எம்.பி., சசி தரூருக்கு, சோனியா சம்மதம் தெரிவித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 'காங்கிரஸ் கட்சியில் சீர்திருத்தம் வேண்டும்' என, கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர் போர்க்கொடி துாக்கினர். இந்த அதிருப்தி குழு தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், சமீபத்தில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்தார்.


latest tamil news


இதற்கிடையே, காங்., தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல், அடுத்த மாதம் 17ல் நடக்கவுள்ளது. இதில் ஓட்டளிக்கும் வாக்காளர்களின் விபரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என, அதிருப்தி தலைவர்களில் ஒருவரான, லோக்சபா எம்.பி., சசி தரூர் உள்ளிட்டோர் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, காங்., தலைவர் தேர்தலில் சசி தரூர் போட்டியிடப் போவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் நேற்று காலை, 'காங்கிரஸ் கட்சியில் சீர்திருத்தம் வேண்டும்' என, அந்த கட்சியின் இளைஞர் பிரிவைச் சேர்ந்த, 650க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டு, சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தனர். இதற்கு சசி தரூர் வரவேற்பு தெரிவித்திருந்தார். நேற்று மதியம் டில்லியில் உள்ள சோனியா வீட்டுக்கு சென்ற சசி தரூர், அவரைச் சந்தித்துப் பேசினார். காங்., வட்டாரங்கள் கூறியதாவது:காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்புவதாக, சோனியாவிடம் சசி தரூர் தெரிவித்துள்ளார். இதற்கு சோனியாவும் சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. எனவே, காங்., தலைவர் தேர்தலில், சசி தரூரும், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டும் போட்டியிட வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-செப்-202208:58:57 IST Report Abuse
எவர்கிங் காங்கிரஸ் தலைவர் தேர்தல் முடிவுகள் ஒருபக்கம் இருக்கட்டும் விடுங்க....அந்த இரெண்டாவது மனைவி சுனந்தா புஷ்கரின் மர்ம மரண வழக்கு முடிவு என்னாச்சு?! அதை முதலில் பேசுவோம் வாங்க!!
Rate this:
Cancel
காஷ்மீர் கவுல் பிராமணன். இதெல்லாம் வெறும் கண்துடைப்பு.
Rate this:
Cancel
Yogeshananda - Erode,இந்தியா
20-செப்-202207:51:58 IST Report Abuse
Yogeshananda இத்தாலி கொத்தடிமை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X