அரசுக்கு எதிராக அடுத்த அதிரடிவீடியோ வெளியிட்டார் கவர்னர்| Dinamalar

அரசுக்கு எதிராக அடுத்த அதிரடி'வீடியோ' வெளியிட்டார் கவர்னர்

Added : செப் 20, 2022 | |
திருவனந்தபுரம், கேரளாவின் கண்ணுார் பல்கலை விழாவின் போது, தன்னை தாக்க முயன்றவர்கள் தொடர்பான, 'வீடியோ'வை வெளியிட்ட கவர்னர் ஆரீப் முகமது கான், மாநில அரசு மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை கூறினார். கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பல்கலை ஒன்றின் பேராசிரியராக

திருவனந்தபுரம், கேரளாவின் கண்ணுார் பல்கலை விழாவின் போது, தன்னை தாக்க முயன்றவர்கள் தொடர்பான, 'வீடியோ'வை வெளியிட்ட கவர்னர் ஆரீப் முகமது கான், மாநில அரசு மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை கூறினார். கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பல்கலை ஒன்றின் பேராசிரியராக முதல்வர் பினராயி விஜயனின் உதவியாளர் மனைவி நியமிக்கப்பட்டார்.


மோதல்


இந்த நியமனத்தை கவர்னர் ஆரீப் முகமது கான் நிராகரித்தார். இது தொடர்பாக கேரள கவர்னர் ஆரீப் முகமது கானுக்கும், முதல்வர் பினராயி விஜயனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.பல்கலைகளின் துணைவேந்தர்களை நியமிப்பதில், கவர்னருக்கு உள்ள அதிகாரத்தை குறைத்து, மாநில அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்தது. இதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் இரு தரப்பினருக்கும் மோதல் அதிகரித்தது. இது குறித்து கவர்னர் ஆரீப் முகமது கான், 'கண்ணுார் பல்கலையில், 2019ல் நடந்த மாநாட்டில் பங்கேற்க சென்றபோது, அங்கிருந்தோர் திடீரென எனக்கு எதிராக கோஷமிட்டு தாக்க முயன்றனர். இந்த விவகாரத்தில் போலீசார் இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை.'இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தக் கூடாது என்று போலீசாருக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். 'இது தொடர்பாக, 'வீடியோ' ஆதாரங்களையும், சில ரகசிய கடித ஆதாரங்களையும் வெளியிடுவேன்' என, நேற்று முன்தினம் கூறியிருந்தார். இந்நிலையில் திருவனந்தபுரத்தில் கவர்னர் மாளிகையில் செய்தியாளர் கூட்டத்துக்கு கவர்னர் நேற்று ஏற்பாடு செய்திருந்தார். அப்போது அங்கு சில வீடியோக்களை ஒளிபரப்பினார். தனக்கும், அரசு தரப்புக்கும் இடையே நடந்த உரையாடல் தொடர்பான 'ஆடியோ'க்களையும் வெளியிட்டார். இதன் பின் கவர்னர் ஆரீப் முகமது கான் கூறியதாவது:கண்ணுார் பல்கலையில் என்னை தாக்குவதற்கு சிலர் முயற்சித்தனர். அவர்களை போலீசார் தடுக்க முயன்றபோது, தற்போது முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் முக்கிய அதிகாரி ஒருவர், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தார்.


முயற்சி


அந்த வீடியோவைத் தான் இங்கு ஒளிபரப்பினேன். முதல்வரின் தனிச் செயலராக பணியாற்றும் கே.கே.ராகேஷ் தான், அந்த அதிகாரி. கவர்னர் மாளிகையின் பணி நியமனங்களில் மாநில அரசு தலையிட்டது. இது தொடர்பான உரையாடல்கள் தான் தற்போது ஒலிபரப்பப்பட்டன. அதிருப்தியாளர்களின் குரல்களை ஒடுக்க, மாநில அரசு முயற்சிக்கிறது. பல்கலைகளில் கவர்னருக்கு முழு அதிகாரம் உள்ளது. இதை மாநில அரசால் குறைக்கவோ, தடுக்கவோ முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X