சரியான தகவல் தொகுப்பு இல்லாததால் குளறுபடி: அமைச்சர் மனோ தங்கராஜ் ஆதங்கம்

Added : செப் 20, 2022 | |
Advertisement
திருப்பூர்;''தமிழக அரசிடம் சரியான தகவல் தொகுப்பு இல்லாததால், பல்வேறு குளறுபடி ஏற்படுகிறது,'' என, அமைச்சர் மனோ தங்கராஜ் பேசினார்.'இ-ஆபீஸ்' திட்டம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் வினீத் தலைமையில் நடந்த கூட்டத்தில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆய்வு மேற்கொண்டனர்.அரசு கேபிள் 'டிவி'
சரியான தகவல் தொகுப்பு இல்லாததால் குளறுபடி: அமைச்சர் மனோ தங்கராஜ் ஆதங்கம்

திருப்பூர்;''தமிழக அரசிடம் சரியான தகவல் தொகுப்பு இல்லாததால், பல்வேறு குளறுபடி ஏற்படுகிறது,'' என, அமைச்சர் மனோ தங்கராஜ் பேசினார்.'இ-ஆபீஸ்' திட்டம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் வினீத் தலைமையில் நடந்த கூட்டத்தில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆய்வு மேற்கொண்டனர்.அரசு கேபிள் 'டிவி' நிறுவன தலைவர் சிவக்குமார், மேயர் தினேஷ்குமார், டி.ஆர்.ஓ., ஜெய்பீம், மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தனர்.கலெக்டர் பேசுகையில், ''இ-ஆபீஸ்' திட்டத்தால், கோப்புகளை அனுப்பி வைப்பதும், தேடி எடுப்பதும் எளிதாக மாறியுள்ளது. இதனால், காலவிரயம் தவிர்க்கப்படுகிறது. சிலவகை கோப்புகள், சான்றிதழ்களை அனுப்பும் போது, உண்மை தன்மையை உறுதி செய்யும் வகையில், க்யூ.ஆர்., கோடு அல்லது டிஜிட்டல் கையொப்ப வசதியுடன் அனுப்ப வழிவகை செய்ய வேண்டும். எதிர்காலத்தில், ஆடிட்டிங் ஆட்பேசனை இல்லாதவகையில் 'இ-ஆபீஸ்' மேம்படுத்தப்பட வேண்டும்,'' என்றார்.அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது:டிஜிட்டல் மயமானதால், முறைகேடுகள் தடுக்கப்பட்டுள்ளது. 'இ-சேவை' மைய குறைபாடுகளும் சரிசெய்யப்படும். டிஜிட்டல் மயமான பிறகு, தவறு செய்பவர்கள் தண்டிக்கப்படுவர். உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்திருந்தும், தள்ளுபடி செய்யப்பட்டால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழக அரசிடம் சரியான தகவல் தொகுப்பு இல்லாததால், பல்வேறு குளறுபடி ஏற்படுகிறது. வசதி படைத்தவர் அரசு திட்டங்களில் பயன்பெறுகின்றனர்; ஏழைகளுக்கு, திட்டம் சென்றடைவதில்லை. தகுதியான நபர்களுக்கு அரசு திட்டம் கிடைக்காமல் இருக்க காரணம், தகவல் தரவுகள் இல்லாததே. அதற்காக, புதிய திட்டத்தை முதல்வர் விரைவில் அறிமுகம் செய்வார்.இவ்வாறு, அமைச்சர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X