வாலிபரை தாக்கி பணம் பறிப்பு:ஐந்து பேர் சிறையில் அடைப்பு

Added : செப் 20, 2022 | |
Advertisement
கோவை:கோவை கணபதியில், உ.பி., மாநில வாலிபர்களை தாக்கி பணம், மொபைல் போன் பறித்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.உ.பி., மாநிலம் அலகாபாத்தை சேர்ந்தவர் ஷிதேந்திர சிங், 32. இவர் கோவை கணபதி சங்கனுார் ரோட்டில் தன் சகோதரர் சத்யேந்திர சிங், மகேந்திர சிங் ஆகியோருடன் வசித்து வருகிறார்.செப்.,14ம் தேதி இரவு 9:30 மணிக்கு சத்யேந்தர், மகேந்தர் ஆகியோர் மது பாட்டில் வாங்கிக்கொண்டு, அறைக்கு சென்று

கோவை:கோவை கணபதியில், உ.பி., மாநில வாலிபர்களை தாக்கி பணம், மொபைல் போன் பறித்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.உ.பி., மாநிலம் அலகாபாத்தை சேர்ந்தவர் ஷிதேந்திர சிங், 32. இவர் கோவை கணபதி சங்கனுார் ரோட்டில் தன் சகோதரர் சத்யேந்திர சிங், மகேந்திர சிங் ஆகியோருடன் வசித்து வருகிறார்.செப்.,14ம் தேதி இரவு 9:30 மணிக்கு சத்யேந்தர், மகேந்தர் ஆகியோர் மது பாட்டில் வாங்கிக்கொண்டு, அறைக்கு சென்று கொண்டிருந்தனர்.அப்போது அவர்களை வழி மறித்த வாலிபர் ஒருவர், 'நீங்கள் தமிழா, ஹிந்தியா' என்று விசாரித்தார். 'ஹிந்தி' என்று கூறியதும், சரமாரியாக தாக்கினார். அங்கிருந்த வேறு சிலரும் இவர்களை தாக்கினர்.அவர்களிடம் இருந்த மொபைல் போன், பணம் 4 ஆயிரம் ஆகியவற்றையும் பறித்துக் கொண்டனர். காயமுற்ற இருவரும், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சம்பவம் தொடர்பாக விசாரித்த சரவணம்பட்டி போலீசார், கணபதி முதல் வீதியை சேர்ந்த பிளாக்கி விஜய், 27, ஆறாவது வீதி பிரவின் குமார், 26, சின்னவேடம்பட்டி பிரவின், 25, பால் விக்டர் ஜோஸ்வா, 27, காந்திபுரம் ராஜூ நாயுடு லே அவுட் அருண் பிரசாத், 24, ஆகிய 5 பேரை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இந்த நபர்கள் மீது, வெவ்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மூவர் மீது கொலை வழக்கு இருப்பதையும் கண்டறிந்த போலீசார், வழக்கு விசாரணையை விரைவுபடுத்த முடிவு செய்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X