15 வயது சிறுமி கர்ப்பம்: காதலன் போக்சோவில் கைது

Added : செப் 20, 2022 | |
Advertisement
வடவள்ளி:வடவள்ளி பகுதியில், 15 வயது சிறுமியை, கர்ப்பமாக்கிய வாலிபரை, போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.வடவள்ளி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர், 15 வயது சிறுமி. சிறுமியின், தந்தையும், தாயும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். சிறுமி தனது தாயுடன் வசித்து வருகிறார். சிறுமி, பத்தாம் வகுப்பு பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தி வீட்டில்

வடவள்ளி:வடவள்ளி பகுதியில், 15 வயது சிறுமியை, கர்ப்பமாக்கிய வாலிபரை, போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.வடவள்ளி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர், 15 வயது சிறுமி. சிறுமியின், தந்தையும், தாயும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். சிறுமி தனது தாயுடன் வசித்து வருகிறார். சிறுமி, பத்தாம் வகுப்பு பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தி வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில், சிறுமியின் பக்கத்து வீட்டை சேர்ந்த கோகுல்கிருஷ்ணன் என்ற கார்த்தி,22, சிறுமியை காதலிப்பதாக கூறி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.இதில், சிறுமி 7 மாதம் கர்ப்பமாகியுள்ளார். இது குறித்து சிறுமி, கோகுல்கிருஷ்ணனின் தாயிடம் கூறியுள்ளார். அதற்கு கோகுல்கிருஷ்ணனின் தாய், மகன் வந்ததும் விசாரிக்கிறேன் என கூறியுள்ளார். இதனையடுத்து, வீட்டுக்கு வந்த சிறுமி, சாணி பவுடரை குடித்து, தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அங்கு வந்த சிறுமியின் உறவினர்கள், சிறுமியை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில், பேரூர் அனைத்து மகளிர் போலீசார், வழக்கு பதிவு செய்து, கோகுல்கிருஷ்ணனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X