மின் கட்டண உயர்வை கண்டித்துதொழில் துறையினர் உண்ணாவிரதம்

Added : செப் 20, 2022 | |
Advertisement
பல்லடம்;மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, பல்லடம் வட்டார தொழில் துறையினர் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, பல்லடம் பகுதியில் உள்ள ஜவுளி உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில், தொழில் துறையினர் இணைந்த உண்ணாவிரத போராட்டம் பல்லடத்தில் இன்று காலை 8.00 முதல் மாலை

பல்லடம்;மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, பல்லடம் வட்டார தொழில் துறையினர் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, பல்லடம் பகுதியில் உள்ள ஜவுளி உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில், தொழில் துறையினர் இணைந்த உண்ணாவிரத போராட்டம் பல்லடத்தில் இன்று காலை 8.00 முதல் மாலை 6.00 மணி வரை நடக்க உள்ளது.கொசவம்பாளையம் ரோட்டில் நடக்கவுள்ள போராட்டத்துக்கு, ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள், விசைத்தறி, சைசிங், நாடா இல்லா தறிகள், சுல்ஜர், ஏர்ஜெட் உள்ளிட்ட ஜவுளி தொழில் சார்ந்த நிறுவனங்கள் அனைத்தும் பங்கேற்க உள்ளன.இதுதவிர, ஒரு நாள் உற்பத்தி நிறுத்த போராட்டத்திலும் ஈடுபடுவதாக நாடா இல்லாத தறிகள் சங்கம் (சிஸ்வா) தெரிவித்துள்ளது. ஒரு நாள் உற்பத்தி நிறுத்த போராட்டம் காரணமாக, 5 லட்சம் யூனிட் மின்சாரத்துக்கான வருவாய் இழப்பு மின் வாரியத்துக்கு ஏற்படும் என, அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.மின் கட்டண உயர்வு குறித்து, அரசின் நிலைப்பாடு என்ன என்பதை அறிந்து கொண்ட பின், அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் தொழில் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X