தி.மு.க.,வில் மாவட்டம் குறைப்பு :அமைச்சர், எம்.எல்.ஏ.,வின் கட்சி பொறுப்பு என்னாகும்?

Added : செப் 20, 2022 | |
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் தி.மு.க.,வில் இருந்த நான்கு கட்சி மாவட்டங்கள் இரண்டாக குறைக்கப்பட்டுள்ளது. உட்கட்சி தேர்தல் மனுத்தாக்கல் அறிவித்துள்ள நிலையில், புதிய மாவட்ட செயலாளர்கள் யார் என்பதில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தை பொருத்தவரை, தி.மு.க.,வில் மத்திய மாவட்டம், வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாவட்டம் என மொத்தம் நான்கு மாவட்டங்கள்

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் தி.மு.க.,வில் இருந்த நான்கு கட்சி மாவட்டங்கள் இரண்டாக குறைக்கப்பட்டுள்ளது. உட்கட்சி தேர்தல் மனுத்தாக்கல் அறிவித்துள்ள நிலையில், புதிய மாவட்ட செயலாளர்கள் யார் என்பதில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தை பொருத்தவரை, தி.மு.க.,வில் மத்திய மாவட்டம், வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாவட்டம் என மொத்தம் நான்கு மாவட்டங்கள் இருந்தன. தற்போது, திருப்பூர் தெற்கு, வடக்கு மற்றும் பல்லடம் தொகுதி அடங்கிய வடக்கு மாவட்டமாகவும், உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் மற்றும் காங்கயம் தொகுதிகள் அடங்கிய திருப்பூர் தெற்கு மாவட்டம் என இரு மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.திருப்பூர் வடக்கு மாவட்டத்திலிருந்த அவிநாசி தொகுதி கோவை வடக்கு மாவட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு கட்சியினரிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து, அக்கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:கட்சியில் மாவட்டம் இரண்டாக குறைக்கப்பட்ட நிலையில் தற்போது பதவியில் உள்ள இரு மாவட்ட செயலாளர்கள் பதவி பறிபோகும் நிலை உள்ளது. கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ள அமைச்சர் சாமிநாதன், கட்சியின் துணை பொது செயலாளராக நியமிக்கப்படலாம்.இதனால், தற்போதைய வடக்கு மாவட்ட செயலாளராக உள்ள பத்மநாபன், இளைஞர் அணி அமைப்பாளராக உள்ள உடுமலை ஜெயக்குமார் இருவரில் ஒருவருக்கு இந்த வாய்ப்புள்ளது. கட்சியில் இளைஞர் அணிக்கு முக்கியத்துவம் தர வேண்டிய நிலையில் ஜெயக்குமார் நியமிக்கப்பட்டால், பத்மநாபனுக்கு வாரிய தலைவர் போன்ற பதவி ஏதாவது வழங்கப்படலாம்.வடக்கு மாவட்டத்தில் செயலாளராக, தற்போது மத்திய மாவட்ட செயலாளராக உள்ள தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ், வடக்கு நகர செயலாளராக உள்ள மேயர் தினேஷ்குமார் இருவரில் ஒருவர் நியமிக்கப்படலாம்.கட்சியில் சீனியராக உள்ள நிலையில் செல்வராஜ்க்கு வாரிய தலைவர் அல்லது மாநில அளவில் கட்சி பொறுப்பு வழங்கப்படலாம்.அவிநாசி தொகுதியை பொருத்தவரை மீண்டும் அப்பகுதி திருப்பூர் வடக்கு மாவட்டத்தில் இணைக்கப்பட வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X