மாதம்பட்டி மக்களுக்கு பஸ் வசதி வேண்டும்! இருப்பதோ ஒரு பஸ்...அதிலும் கடுமையான ரஷ்

Added : செப் 20, 2022 | |
Advertisement
தெரு விளக்கு எரிவதில்லைமாநகராட்சி, 77வது வார்டு, சொக்கம்புதுார், ஜீவா சாலை டூ மாசாணியம்மன் கோவில் வீதி வரை உள்ள தெருவிளக்குகள் எரிவதில்லை. கடந்த முறை சரி செய்து, ஒரு வாரம் மட்டுமே எரிந்தது. இரவு நேரங்களில் கும்மிருட்டாக உள்ளது. பொதுமக்கள் அவதியடைகின்றனர்.-கணேசன், சொக்கம்புதுார்.குப்பை சேகரிக்கவில்லைஇருகூர் பேரூராட்சிக்குட்பட்ட ஒண்டிப்புதுார்
மாதம்பட்டி மக்களுக்கு பஸ் வசதி வேண்டும்! இருப்பதோ ஒரு பஸ்...அதிலும் கடுமையான ரஷ்


தெரு விளக்கு எரிவதில்லை



மாநகராட்சி, 77வது வார்டு, சொக்கம்புதுார், ஜீவா சாலை டூ மாசாணியம்மன் கோவில் வீதி வரை உள்ள தெருவிளக்குகள் எரிவதில்லை. கடந்த முறை சரி செய்து, ஒரு வாரம் மட்டுமே எரிந்தது. இரவு நேரங்களில் கும்மிருட்டாக உள்ளது. பொதுமக்கள் அவதியடைகின்றனர்.-கணேசன், சொக்கம்புதுார்.


குப்பை சேகரிக்கவில்லை


இருகூர் பேரூராட்சிக்குட்பட்ட ஒண்டிப்புதுார் பாலத்தின் கீழ் உள்ள குடியிருப்புகளில், கடந்த இரண்டு வாரங்களாக குப்பை சேகரிக்க ஆட்கள் வருவதில்லை. குப்பையை கொட்ட இங்கு போதுமான வசதி இல்லாததால், இப்பகுதி மக்கள் அவதியடைகின்றனர்.- கார்த்திக், ஒண்டிப்புதுார்.


கம்பம் மட்டும் புதுசு


வடவள்ளி, ஸ்ரீராம் நகர் 7வது வீதியில், பழைய மின்கம்பத்தை மாற்றி புது மின் கம்பம் அமைத்து, 20 நாட்கள் ஆகிறது. இன்னும் தெரு விளக்கு மட்டும் எரியவில்லை. பழைய கம்பத்தையும் சாலை ஓரத்தில் போட்டு சென்றுள்ளனர். அகற்றாமல் குப்பை சேர்ந்து கிடக்கிறது.- மணிகண்டபிரபு, வடவள்ளி.


தெரு விளக்கு வேண்டும்


பீளமேடு - சவுரிபாளையம் சாலை அகலப்படுத்தி பல மாதங்கள் ஆகிறது. ஆனால், இப்பகுதியில் தெருவிளக்கு எரிவதே இல்லை. வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் இருட்டில் சென்று வரும் நிலை இருப்பதால், பெரும் சிரமமாக உள்ளது.-யுவராஜ், பீளமேடு.


விபத்து அபாயம்


தடாகம் ரோடு, முத்தண்ணன் குளம் அருகே உள்ள தண்டுமாரியம்மன் கோவில், எதிரே பாதசாரிகள் பாதையை கடப்பதற்காக சென்டர் மீடியனில் இருந்து, நான்கு தடுப்புகளை அகற்றியுள்ளனர். அந்த வழியில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ வேகமாக திரும்புவதால் விபத்துகள் ஏற்படுகின்றன.- கார்த்திக் குமார், கோவை.


கழிவுநீரால் அவதி


அவிநாசி ரோடு, அண்ணா சிலை சிக்னல் அருகில், கழிவு நீர் சாலை ஓரத்தில் தேங்கி நிற்பதால், துர்நாற்றம் வீசுகிறது. வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பாலா, கோவை.


பேருந்து வசதி வேண்டும்


மாதம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் கிராமங்களுக்கு, எஸ்4 என்ற அரசு பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது. இப்பகுதி மக்களுக்கு போதிய பஸ் வசதி இல்லை. மக்கள் சரியான நேரத்தில் பள்ளி, கல்லுாரி மற்றும் வேலைக்கு சென்று வர சிரமமாக உள்ளது.- நடராஜன், மாதம்பட்டி.


வாகன ஓட்டிகள் அவதி


சிங்காநல்லுார், கிருஷ்ணா கார்டன் பகுதியில், பைபர் இன்டர்நெட் கேபிள் பதிப்பதற்கான பணிகள் நடந்தன. அதற்காக சாலையில் ஓரத்தில் குழி தோண்டி, பெட்டி பதிக்கப்பட்டது. பெட்டியின் மேல் பகுதியில் கான்கிரீட் போடாமல் சென்று விட்டனர். இரும்பு கம்பிகள் கூர்மையாக உள்ளன. வாகன ஓட்டிகள் தடுமாறி விழும் முன் கவனிக்க வேண்டும்.- சத்யா,

சிங்கநல்லுார்.


தெரு நாய் தொல்லை




மக்கள் அவதி


ஏ.கே.எஸ்.நகர், முருகையா லே அவுட் பகுதியில், தெரு நாய்கள் பகல், இரவுநேரங்களிலும் நடந்து செல்லும் மனிதர்களை அச்சுறுத்தும் வகையில் துரத்தி கடிக்கின்றன. சிறு குழந்தைகளை கூட, வெளியில் அழைத்து செல்ல முடியவில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஜூலி, முருகையா லே அவுட்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X