காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்டில் கண்டக்டர் - பரிசோதகர் டிஷ்யூம்| Dinamalar

காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்டில் கண்டக்டர் - பரிசோதகர் 'டிஷ்யூம்'

Added : செப் 20, 2022 | |
கோவை:அரசு பஸ் கண்டக்டர் - டிக்கெட் பரிசோதகர் இடையிலான மோதல் தொடர்பாக, காட்டூர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.கோவை அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருபவர் கோபாலன், 59. கவுண்டம்பாளையம் உடையார் வீதி மீனாட்சி நகரில் வசிக்கிறார்.இவரும், செல்வராஜ் என்ற இன்னொரு பரிசோதகரும், செப்.,18ம் தேதி பகல் 12:10 மணிக்கு காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட் வந்த அரசு பஸ்

கோவை:அரசு பஸ் கண்டக்டர் - டிக்கெட் பரிசோதகர் இடையிலான மோதல் தொடர்பாக, காட்டூர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.கோவை அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருபவர் கோபாலன், 59. கவுண்டம்பாளையம் உடையார் வீதி மீனாட்சி நகரில் வசிக்கிறார்.இவரும், செல்வராஜ் என்ற இன்னொரு பரிசோதகரும், செப்.,18ம் தேதி பகல் 12:10 மணிக்கு காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட் வந்த அரசு பஸ் தடம் எண் 14ல் ஏறி, பரிசோதனையில் ஈடுபட்டனர். அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் 5 பேரிடம் டிக்கெட் இல்லை.'கண்டக்டரிடம் பணம் கொடுத்து டிக்கெட் கேட்டோம். பணம் வாங்கிக்கொண்ட அவர், டிக்கெட் தரவில்லை' என்று பயணிகள் தெரிவித்தனர்.பஸ்சில் கண்டக்டராக பணியில் இருந்த, செட்டிபாளையம் அம்மன் நகரை சேர்ந்த கருப்புசாமி, 41, என்பவரிடம் பரிசோதகர் கோபாலன் விசாரித்தார்.அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். பஸ் ஸ்டாண்டில் பயணிகள் முன்னிலையில் நடந்த இந்த மோதல், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தாக்குதலில் கீழே விழுந்த பரிசோதகர்கள், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இரு தரப்பினரும் அளித்த புகார் அடிப்படையில், காட்டூர் போலீஸ் எஸ்.ஐ., வெள்ளிராஜ் வழக்கு பதிந்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X