சாகிலின் அபார பந்து வீச்சால் எப்.சி.ஏ., அணி வெற்றி வரிசையாக சாய்த்தார் எட்டு விக்கெட்| Dinamalar

சாகிலின் அபார பந்து வீச்சால் எப்.சி.ஏ., அணி வெற்றி வரிசையாக சாய்த்தார் எட்டு விக்கெட்

Added : செப் 20, 2022 | |
கோவை:மாநில அளவிலான சிறுவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில், சாகில் எட்டு விக்கெட் எடுத்து அசத்த, பியூட்சர்கிரிக்கெட் அகாடமி அணி, 196 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.எஸ்.கே., கிரிக்கெட் அகாடமி மற்றும் வாசகம் சமூக அறக்கட்டகளை சார்பில், 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான அகாடமிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி, சுந்தராபுரம் பண்டித நேரு பள்ளி மைதானத்தில் நடந்தது.
சாகிலின் அபார பந்து வீச்சால் எப்.சி.ஏ., அணி வெற்றி வரிசையாக சாய்த்தார் எட்டு விக்கெட்

கோவை:மாநில அளவிலான சிறுவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில், சாகில் எட்டு விக்கெட் எடுத்து அசத்த, பியூட்சர்கிரிக்கெட் அகாடமி அணி, 196 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.எஸ்.கே., கிரிக்கெட் அகாடமி மற்றும் வாசகம் சமூக அறக்கட்டகளை சார்பில், 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான அகாடமிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி, சுந்தராபுரம் பண்டித நேரு பள்ளி மைதானத்தில் நடந்தது. இதில், கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 12 அணிகள். லீக் முறையில் போட்டியிடுகின்றன.நேற்று முன்தினம் பண்டித நேரு பள்ளியில் நடந்த லீக் போட்டியில், நாமக்கல் பியூட்சர் கிரிக்கெட் அகாடமி மற்றும் கோவை, டி.சி.வி.எம்.ஏ,. அணிகள் மோதின.இப்போட்டியில், டாஸ் வென்று முதலில் 'பேட்' தேர்வு செய்த பியூட்சர் அணி, 50 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்தது. ரிதம் குமார் (73), சாகில் (40) மற்றும் சந்தோஷ் (31) ரன்கள் சேர்த்தனர். டி.சி.வி.எம்.ஏ., அணியின் நீரஜ் மற்றும் ஸ்ரீதருண் தலா மூன்று விக்கெட்கள் கைப்பற்றினர்.அடுத்து களமிறங்கிய டி.சி.வி.எம்.ஏ., அணி வீரர்கள், சாகிலின் பந்து வீச்சில் அடுத்தடுத்து அவுட்டாயினர். சிறப்பாக பந்து வீசிய சாகில் எட்டு விக்கெட் கைப்பற்றினார். டி.சி.வி.எம்.ஏ., அணி, 10 ஓவர்களில் 34 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, 196 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X