ஏழு மாதங்களாக சம்பளம் கிடையாது: ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Added : செப் 20, 2022 | |
Advertisement
கோவை:இடமாறுதலில் சென்ற ஆசிரியர்களுக்கு, ஏழு மாதங்களாக ஊதியம் வழங்காததால், ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கோவை மாவட்டத்தில், அங்கலக்குறிச்சி, ஆர்.கோபாலபுரம் அரசுப்பள்ளிகள், 2021 மே மாதம், இடைநிலைப்பள்ளியாக இருந்து தரம் உயர்த்தப்பட்டு, உயர்நிலைப்பள்ளியாக மாற்றப்பட்டன.இப்பள்ளிகளில், காலியாக இருந்த பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், கடந்த மார்ச்

கோவை:இடமாறுதலில் சென்ற ஆசிரியர்களுக்கு, ஏழு மாதங்களாக ஊதியம் வழங்காததால், ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கோவை மாவட்டத்தில், அங்கலக்குறிச்சி, ஆர்.கோபாலபுரம் அரசுப்பள்ளிகள், 2021 மே மாதம், இடைநிலைப்பள்ளியாக இருந்து தரம் உயர்த்தப்பட்டு, உயர்நிலைப்பள்ளியாக மாற்றப்பட்டன.இப்பள்ளிகளில், காலியாக இருந்த பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், கடந்த மார்ச் மாதம் நடந்த கலந்தாய்வில் காண்பிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்டது. இப்பணியிடங்களை தேர்வு செய்த நான்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கும், புதிய பள்ளியில் பொறுப்பேற்றது முதல் தற்போது வரை, சம்பளம் வழங்கப்படவில்லை.கிட்டத்தட்ட ஏழு மாதங்களாக ஊதியமின்றி பணியாற்றுவதால், அடிப்படை செலவினங்களுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.இதை பலமுறை கல்வித்துறை அலுவலகத்தில் எடுத்துரைத்தும், எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை. இதனால், நேற்று குடும்பத்துடன் முதன்மை கல்வி அலுவலகத்தில், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.முதன்மை கல்வி அலுவலர் பூபதி கூறுகையில், ''தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு, பணியிடங்கள் அங்கீகரிக்கப்படவில்லை. கலந்தாய்வில் தரம் உயர்த்தப்பட்ட அரசாணை பதிவேற்றியதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது. இயக்குனரகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சிக்கலுக்கு விரைவில் தீர்வு காணப்படும்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X