சரக்கு வாகனங்களின் அத்துமீறலை கட்டுப்படுத்தணும்!

Added : செப் 20, 2022 | |
Advertisement
அத்துமீறல் அதிகரிப்புபொள்ளாச்சி நகரப்பகுதிக்குள் சரக்கு வாகனங்களில், அத்துமீறி ஆட்களை ஏற்றிச்செல்வதால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச்செல்வோருக்கு அபராதம் விதிக்க வேண்டும்.- தேவேந்திரன், பொள்ளாச்சி.அறிவிப்பு வைக்கணும்!பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, பழைய காந்தி சிலை ரவுண்டானா வரையில்,
சரக்கு வாகனங்களின் அத்துமீறலை கட்டுப்படுத்தணும்!


அத்துமீறல் அதிகரிப்பு



பொள்ளாச்சி நகரப்பகுதிக்குள் சரக்கு வாகனங்களில், அத்துமீறி ஆட்களை ஏற்றிச்செல்வதால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச்செல்வோருக்கு அபராதம் விதிக்க வேண்டும்.- தேவேந்திரன், பொள்ளாச்சி.


அறிவிப்பு வைக்கணும்!


பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, பழைய காந்தி சிலை ரவுண்டானா வரையில், வாகனங்கள் ரோட்டோரம் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. இதனால், போக்குவரத்து பாதிக்கிறது. வாகனங்கள் நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுத்து, 'நோ பார்க்கிங்' அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.- விமல்ராஜ், பொள்ளாச்சி.


ரோடு அமைக்கணும்!


பொள்ளாச்சி, ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சிக்கு உட்பட்ட ராமநாதபுரம் காலனியில், பல ஆண்டுகளாக ரோடு அமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டுனர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். ரோட்டை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- அர்ச்சுணன், ஜமீன் ஊத்துக்குளி.


போக்குவரத்து பாதிப்பு


பொள்ளாச்சி - தாராபுரம் ரோட்டோரம் வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், போக்குவரத்து பாதித்து விபத்துகள் ஏற்படுகின்றன. ரோட்டோரம் வாகனங்கள் நிறுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ராமகிருஷ்ணன், பொள்ளாச்சி.


குப்பை அகற்றணும்!


ஆனைமலை, சுந்தரபுரி மற்றும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அருகே, குப்பை மலைபோல் குவிந்துள்ளதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது; சுகாதாரம் பாதித்துள்ளது. ரோட்டோரத்திலுள்ள குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.- விமல், ஆனைமலை.


'குடி'மகன்களால் தொல்லை


ஆனைமலை - உடுமலை ரோடு, இந்திரா நகர் அருகே, 'குடி'மகன்கள் போதையில் ரோட்டோரம் படுத்து உருளுவதால், போக்குவரத்து பாதிப்பதுடன், இரவு நேரம் விபத்துகள் ஏற்படுகிறது. 'குடி'மகன்கள் அட்டகாசத்துக்கு போலீசார் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.- சதீஸ்குமார், ஆனைமலை.


நடவடிக்கை எடுங்க!


பொள்ளாச்சி, ஆழியாறு புளியங்கண்டி அருகே வளைவுகளில் போதிய அளவு ஒளிபிரதிபலிப்பான்கள் பொருத்தப்படாமல் உள்ளதால், வாகன ஓட்டுனர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.- வஞ்சிமுத்து, ஆழியாறு.


அதிகாரிகள் அலட்சியம்


பொள்ளாச்சி, ஜமீன் ஊத்துக்குளி பயனீர் எஸ்டேட் இரண்டாவது அலகு பகுதியில், குடியிருப்புகளுக்கு மத்தியில் குட்டை போல் தண்ணீர் தேங்கி நிற்பதால், கொசுத்தொல்லை அதிகரித்து மக்களுக்கு வைரஸ் காய்ச்சல் பரவுகிறது. மேலும், கடும் துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது. பலமுறை புகார் அளித்தும் பேரூராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.- மது, பயனீர் எஸ்டேட்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X