மேற்கு புறவழிச்சாலை திட்டத்தை வேகப்படுத்துங்க; நகர ரோடுகளையும் சீர்செய்யுங்கள்!

Updated : செப் 20, 2022 | Added : செப் 20, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி:'நகராட்சி ரோடுகளை சீரமைக்கவும்; பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழிகளை தரமாக அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, பொள்ளாச்சி சப் - கலெக்டரிடம் மனு கொடுத்து வலியுறுத்தப்பட்டது.பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது. சப் - கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் தலைமை வகித்தார்.* பொள்ளாச்சி நகர பா.ஜ., தலைவர் பரமகுரு
மேற்கு புறவழிச்சாலை திட்டத்தை வேகப்படுத்துங்க;  நகர ரோடுகளையும் சீர்செய்யுங்கள்!

பொள்ளாச்சி:'நகராட்சி ரோடுகளை சீரமைக்கவும்; பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழிகளை தரமாக அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, பொள்ளாச்சி சப் - கலெக்டரிடம் மனு கொடுத்து வலியுறுத்தப்பட்டது.

பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது. சப் - கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் தலைமை வகித்தார்.* பொள்ளாச்சி நகர பா.ஜ., தலைவர் பரமகுரு மற்றும் நிர்வாகிகள் மனுவில் கூறியிருப்பதாவது:நகராட்சிக்கு உட்பட்ட பல இடங்களில் ரோடுகள் குண்டும், குழியுமாக உருமாறியுள்ளன.
அதில், நகராட்சி, மாநில, தேசிய நெடுஞ்சாலைகளும் மோசமான நிலையில் உள்ளன.ஐயப்பன் கோவில் ரோடு மோசமாக இருப்பதுடன், வேகத்தடை இல்லாமல் உள்ளதால் விபத்துகள் ஏற்படுகிறது. அங்கு ரோட்டை சீரமைத்து, வேகத்தடை அமைக்க வேண்டும்.பாதாள சாக்கடை பணி நிறைவு பெற்ற இடங்களில் ரோடுகள் சீரமைக்கவில்லை; பல இடங்களில், ஆள் இறங்கும் குழிகள் சேதமடைந்துள்ளன. சில இடங்களில் ரோடு மட்டத்தை விட பாதாள சாக்கடை மூடிகள் உயரமாக இருப்பதால் விபத்துகள் ஏற்படுகிறது.மேற்கு புறவழிச்சாலை திட்டத்தில், 8.90 கி.மீ., தொலைவுக்கு, 50.35 கோடி ரூபாய் செலவில் ரோடு அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த திட்டப்பணி பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.பாதாள சாக்கடை பணியை தரமாக மேற்கொள்ள வேண்டும். சாலை விரிவாக்கப்பணிகளை விரைந்து முடித்து மின்விளக்குகள் அமைக்க வேண்டும். மேற்கு புறவழிச்சாலை திட்டப்பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.* வால்பாறை ஹிந்து தமிழர் முன்னணி மாவட்ட செயலாளர் பால்துரை மற்றும் மாநிலக்குழு உறுப்பினர் சீனிவாசன், நிர்வாகிகள் மனுவில் கூறியிருப்பதாவது:கோவில் அருகிலோ, பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய அத்தியாவசிய இடங்களிலோ மதுக்கடை செயல்படக்கூடாது என, அரசு அறிவித்துள்ளது. ஆனால், வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் அருகில், டாஸ்மாக் மதுக்கடை செயல்படுகிறது. இங்கு, 24 மணி நேரமும் மது விற்பனை அமோகமாக நடக்கிறது.அவ்வழியாக கோவிலுக்கு வரும் பக்தர்கள், குடியிருப்பு பகுதி மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு பாதிப்பு உள்ளது. எனவே, மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.*
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் பொதுமக்கள் கொடுத்த மனு: ஆனைமலை, சேத்துமடை அண்ணாநகரில், 136 பழங்குடியின குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு, அங்கன்வாடிக்கு கட்டட வசதி இல்லாததால், தனியார் வீட்டில் செயல்படுகிறது.அங்கு ஒரு குடும்பமும் வசிப்பதால், மாணவர்களுக்கு கல்வி கற்பித்தலில் இடையூறு, கவன சிதறல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அங்கன்வாடி மையத்துக்கு தனிக்கட்டடம் கட்டித்தர வேண்டும். பழங்குடியின மக்களின் மையானத்துக்கு செல்லும் வழித்தடத்தை சீரமைக்கவும், மயானத்தில் நிழற்கூரை அமைத்து, மின்விளக்கு வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, வலியுறுத்தியுள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X