அடிக்கடி சிக்கிக்கொள்ளும் லாரிகள்: நெல்லித்துறை ரோட்டுக்கு விடிவு எப்போது?

Added : செப் 20, 2022 | |
Advertisement
மேட்டுப்பாளையம்:நெல்லித்துறை ரோட்டில் பெரிய குழி உள்ளதால், கிழங்கு மூட்டைகளை ஏற்றி வரும் லாரிகளை, ஓட்ட முடியாமல் டிரைவர்கள் அவதிப்படுகின்றனர்.மேட்டுப்பாளையம் -நெல்லித்துறை ரோட்டில், 80க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மண்டிகள் உள்ளன. நெல்லித்துறை ரோடு, அதன் குறுக்கே உள்ள பக்க ரோடுகளில் கிழங்கு மண்டிகள் உள்ளன. நீலகிரி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து,

மேட்டுப்பாளையம்:நெல்லித்துறை ரோட்டில் பெரிய குழி உள்ளதால், கிழங்கு மூட்டைகளை ஏற்றி வரும் லாரிகளை, ஓட்ட முடியாமல் டிரைவர்கள் அவதிப்படுகின்றனர்.மேட்டுப்பாளையம் -நெல்லித்துறை ரோட்டில், 80க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மண்டிகள் உள்ளன. நெல்லித்துறை ரோடு, அதன் குறுக்கே உள்ள பக்க ரோடுகளில் கிழங்கு மண்டிகள் உள்ளன. நீலகிரி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து, கிழங்கு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு, தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் மண்டிகளுக்கு வருகின்றன.நெல்லித்துறை ரோட்டில், திருப்பூர் நான்காவது குடிநீர் திட்ட குழாய் பதிக்கவும், மேட்டுப்பாளையம் நகராட்சி பாதாள சாக்கடை குழாய் பதிக்கவும், குழிகள் தோண்டப்பட்டன. குழாய்கள் பதித்த பின், கடந்த இரண்டு மாதங்களாக பெய்த மழையால், ரோட்டில் சேறும் சகதியும், ஒரு அடிக்கு மேல் குவிந்து கிடந்தது. இதனால் இந்த ரோட்டில் கிழங்கு மூட்டைகளை ஏற்றி வரும் லாரிகளை, ஓட்ட முடியாமல் டிரைவர்கள் தவிக்கின்றனர்.மேலும், பாதாள சாக்கடை குழாய்களை பதிக்கும் பணிகளில், குடிநீர் வடிகால் வாரியத்தினர், தீவிரம் காட்டாமல் மெத்தனமாக வேலை செய்து வருகின்றனர். இதனால் நெல்லித்துறை ரோட்டில் உள்ள குழிகளை மூடாமல், கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக அப்படியே வைத்துள்ளனர்.இது குறித்து லாரி டிரைவர்கள் கூறியதாவது:15 லிருந்து, 30 டன் கிழங்கு மூட்டைகளை ஏற்றி வரும், பல லாரிகள், ரோட்டில் உள்ள சேற்றில் சிக்கி வெளியே எடுக்க முடியாமல் தவித்து வருகிறோம். பல நாட்கள் பொக்லைன் மற்றும் கிரேன் வாகனங்கள் வாயிலாக, லாரிகளை வெளியே எடுக்கவேண்டியுள்ளது. இதற்கு ஒவ்வொரு முறையும், 2000 ஆயிரத்திலிருந்து நான்காயிரம் ரூபாய் வரை வாடகை கொடுக்க வேண்டியுள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம், இச்சாலையை சீரமைக்கவேண்டும்.இவ்வாறு, டிரைவர்கள் கூறினர்.இது குறித்து நகராட்சி கமிஷனர் வினோத் கூறுகையில், "நெல்லித்துறை ரோட்டில் திருப்பூர் குடிநீர் குழாயும், பாதாள சாக்கடை குழாயும் பதிக்கும் பணிகள் முடிந்துள்ளன. இதில் தார் ரோடு போட,15 நாட்கள் ஆகும். இந்நாட்களில் இவ்வழியாக வாகனங்கள் வராமல் இருக்க வேண்டும். அதனால் கிழக்கு மண்டி உரிமையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதன் பின் தார் ரோடு போட நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X