நான்கு வழிச்சாலை திட்ட பாலங்கள் கட்டுமான பணி தீவிரம்

Added : செப் 20, 2022 | |
Advertisement
உடுமலை:நான்கு வழிச்சாலையில், மாநில நெடுஞ்சாலை மற்றும் இதர ரோடுகள் குறுக்கிடும் பகுதியில், உயர் மட்ட பாலங்கள் கட்டும் பணி, உடுமலை பகுதியில் தீவிரமாக நடக்கிறது.மத்திய அரசின், 'பாரத் மாலா பிரயோஜனா' திட்டத்தில், பொள்ளாச்சியிலிருந்து, உடுமலை வழியாக திண்டுக்கல் வரை, நான்கு வழிச்சாலை திட்டம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக, மேற்கொள்ளப்படுகிறது.முதற்கட்டமாக, திட்ட
நான்கு வழிச்சாலை திட்ட பாலங்கள் கட்டுமான பணி தீவிரம்

உடுமலை:நான்கு வழிச்சாலையில், மாநில நெடுஞ்சாலை மற்றும் இதர ரோடுகள் குறுக்கிடும் பகுதியில், உயர் மட்ட பாலங்கள் கட்டும் பணி, உடுமலை பகுதியில் தீவிரமாக நடக்கிறது.மத்திய அரசின், 'பாரத் மாலா பிரயோஜனா' திட்டத்தில், பொள்ளாச்சியிலிருந்து, உடுமலை வழியாக திண்டுக்கல் வரை, நான்கு வழிச்சாலை திட்டம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக, மேற்கொள்ளப்படுகிறது.முதற்கட்டமாக, திட்ட வடிவமைப்பு அடிப்படையில், உயரமாக மண் கொட்டப்பட்டு, பல வடிவ ஜல்லி கற்கள், இரு வழியாக பிரிக்கும் வகையில் ரோட்டோரங்களில் கான்கிரீட் தடுப்புகள், மையத்தடுப்பு பகுதி அமைக்கும் பணி நடைபெற்றது.பின்னர், ஓடுதளம் தார்ரோடாக மேம்படுத்தப்பட்டது. இந்த நான்கு வழிச்சாலையில், மேலும், பழநி, சண்முகநதி, அமராவதி ஆறுகளின் குறுக்கே உயர் மட்ட பாலங்கள், இரண்டு ரயில்வே பாலங்கள், 46 சிறு பாலங்கள், 490 மிகச்சிறு பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டிருந்தது.தற்போது, உடுமலை-செஞ்சேரிமலை ரோடு மற்றும் உடுமலை-பல்லடம் மாநில நெடுஞ்சாலை, நான்கு வழிச்சாலையில், குறுக்கிடும் பகுதியில், உயர் மட்ட பாலம் கட்டும் பணி தீவிரமடைந்துள்ளது.இதில், செஞ்சேரிமலை ரோட்டில், பாலம் கட்டுமான பணிகளின் போது, போக்குவரத்து பாதிக்காமல், இருக்க, தற்காலிக மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.பல்லடம் மாநில நெடுஞ்சாலையில், ஒரு பகுதியில், பாலம் கட்டுமான பணிகள் தீவிரமடைந்துள்ளது. மறு பகுதியில், பணிகள் இன்னும் துவங்கவில்லை.முக்கிய ரோடுகளின் குறுக்கிடும் பகுதியில், பாலம் கட்டுமான பணிகள் நிறைவு பெற்ற பிறகு, ஆறுகளின் குறுக்கே, உயர் மட்ட பாலம் கட்டும் பணிகள் துவங்க வாய்ப்புள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X