ஓரங்கட்டப்பட்ட அறிவியல் வாகனம் மீண்டும் பயன்பாட்டிற்கு வருமா?

Added : செப் 20, 2022 | |
Advertisement
கோவை:அறிவியல் கொண்டாட்ட வாகனம், கடந்த ஆறு ஆண்டுகளாக எவ்வித பராமரிப்பும் இன்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.பழைய வாகனங்களை ஏலமிட அனுமதித்தும், அதற்கான பணிகள் துவங்கப்படாமல் இருப்பதாக, புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில், கோவை, திருச்சி, கடலுார் உட்பட, 15 மாவட்டங்களுக்கு, 'அறிவியல் கொண்டாட்டம்' என்ற பெயரில், நடமாடும் அறிவியல் வாகனம், கடந்த 2009ல் வழங்கப்பட்டது.இதை இயக்க,

கோவை:அறிவியல் கொண்டாட்ட வாகனம், கடந்த ஆறு ஆண்டுகளாக எவ்வித பராமரிப்பும் இன்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.பழைய வாகனங்களை ஏலமிட அனுமதித்தும், அதற்கான பணிகள் துவங்கப்படாமல் இருப்பதாக, புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில், கோவை, திருச்சி, கடலுார் உட்பட, 15 மாவட்டங்களுக்கு, 'அறிவியல் கொண்டாட்டம்' என்ற பெயரில், நடமாடும் அறிவியல் வாகனம், கடந்த 2009ல் வழங்கப்பட்டது.இதை இயக்க, பிரத்யேக ஓட்டுனர் மற்றும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் கல்வித்தகுதியில், உதவி தொடக்க கல்வி அலுவலர் நியமிக்கப்பட்டார்.அவர், கிராமப்புற பள்ளிகளுக்கு வாகனத்தில் சென்று, அறிவியல் பாடங்களை தக்க உபகரணங்களுடன் எளிமையாக கற்றுத்தந்தார். இதனால் மாணவர்கள் மத்தியில் அறிவியல் ஆர்வம் துாண்டப்பட்டது. பெற்றோர், மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற இத்திட்டம், ஏனோ திடீரென முடக்கப்பட்டது.அறிவியல் வாகனத்திற்கு பராமரிப்பு நிதி அளிக்காததால், பல மாவட்டங்களில், பழுதடைந்த நிலையில் ஓரங்கட்டப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில், இவ்வாகனத்திற்கு பிரத்யேக ஓட்டுனர் இல்லை. எனவே, கடந்த ஆறு ஆண்டுகளாகவாகனம் இயக்கப்படவில்லை.2018ல் இருந்து, அறிவியல் பாடத்திற்காக நியமிக்கப்பட்ட உதவி தொடக்க கல்வி அலுவலர் பணியிடமும் நீக்கப்பட்டதால், முழுமையாக இந்த வாகனம் முடக்கப்பட்டது.மீண்டும் இந்த அருமையான திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X