கோயில்களை இடித்து கடை கட்டி வாடகைக்கு விட முயற்சி

Updated : செப் 20, 2022 | Added : செப் 20, 2022 | கருத்துகள் (20) | |
Advertisement
உசிலம்பட்டி : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய சந்தை திடலுக்குள் விநாயகர், இரகாமன் கோயில்களை இடித்து விட்டு 28 கடைகள் கட்டி வாடகைக்கு விடும் முயற்சியில் தி.மு.க., அ.தி.மு.க., கூட்டணி அமைத்துள்ளனர்.இங்கு நபார்டு நிதியுதவியுடன் 240 கடைகளும், ஊராட்சி நிர்வாகம் சார்பில் நுாற்றுக்கணக்கான கடைகளையும் தரை வாடகைக்கு விட்டுள்ளனர். தரைவாடகைக்கு பெற்றுள்ளவர்கள் கடைகள்
DMK, ADMK, கோயில், கடை, வாடகை,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


உசிலம்பட்டி : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய சந்தை திடலுக்குள் விநாயகர், இரகாமன் கோயில்களை இடித்து விட்டு 28 கடைகள் கட்டி வாடகைக்கு விடும் முயற்சியில் தி.மு.க., அ.தி.மு.க., கூட்டணி அமைத்துள்ளனர்.

இங்கு நபார்டு நிதியுதவியுடன் 240 கடைகளும், ஊராட்சி நிர்வாகம் சார்பில் நுாற்றுக்கணக்கான கடைகளையும் தரை வாடகைக்கு விட்டுள்ளனர். தரைவாடகைக்கு பெற்றுள்ளவர்கள் கடைகள் கட்டி தனிநபர்களுக்கு கூடுதல் வாடகைக்கு விட்டுள்ளனர்.


latest tamil news



இந்த கடைகளுக்கான வாடகையை சீரமைக்க நீதிமன்ற உத்தரவுபடி முதற்கட்டமாக நபார்டு நிதியுதவியுடன் கட்டப்பட்ட கடைகளுக்கு மட்டும் ஏலம் விட்டனர். ஏலம் எடுத்தவர்களுக்கு கடைகளை ஒதுக்கும் பணி நடந்து வருகிறது.இந்நிலையில், சந்தையில் உள்ள நுாலகத்தின் பின்புறம் இருந்த விநாயகர், இரகாமன் கோயில்களை இடித்து விட்டு 28 புதிய கடைகள் அமைக்கும் பணியில் தி.மு.க., ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ரஞ்சனியின் கணவர் சுதந்திரம், அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் பாண்டியம்மாள் கணவர் உக்கிரபாண்டியன் மற்றும் இரு கட்சிகளின் கவுன்சிலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஊராட்சி ஒன்றிய கமிஷனர் பாண்டியிடம் கேட்டபோது, 'புதிதாக கடைகள் கட்ட எந்த அனுமதியும் கொடுக்கவில்லை. கட்டியுள்ள கடைகளை அப்புறப்படுத்தவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் போலீசில் புகார் தெரிவித்துள்ளேன்' என்றார். ஆனாலும் கடைகள் கட்டும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. தி.மு.க., அ.தி.மு.க., வினர் மீது நடவடிக்கை எடுக்க பா.ஜ., சார்பில் புகார் செய்யப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
20-செப்-202213:13:13 IST Report Abuse
Lion Drsekar ஒன்றை உலகம் புரிந்து கொள்ளவேண்டும் காட்சி ஒன்றுதான் ஆனால் ஆட்சிகள் மட்டுமே மாறும், அவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள் ஆனால் மக்கள் ஒற்றுமையாக வாழ வழி விடமாட்டார்கள், மக்கள் ஒன்று சேர்ந்தால் உண்டுவாழ்வு, இதற்க்கு முட்டுக்கட்டை ஏற்படுத்துவதுதான் இன்றைய ஜனநாயகத்தின் கொள்கையாகிப்போனது வருத்தம் அளிக்கிறது . வந்தே மாதரம்
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
20-செப்-202212:05:54 IST Report Abuse
Ramesh Sargam திமுக இந்த உலகில் இருக்கும்வரை ஹிந்துக்களுக்கு, ஹிந்து வழிபடும் ஸ்தலங்களுக்கு பாதுகாப்பே இல்லை. திமுக ஒழியவேண்டும்.
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
20-செப்-202218:54:39 IST Report Abuse
கல்யாணராமன் சு.அவங்க கூட அந்த அதிமுக (அ(வங்களும்) தி(ருடர்களை) மு(ன்னேற்றும்) க(ட்சிதான்)) வும் ஒழியணும் ............
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
20-செப்-202211:49:53 IST Report Abuse
duruvasar நாகரீகமாக சொல்லவேண்டுமென்றால் இதனை கையாடல் திராவிட மாடல் என குறிப்பிடலாம். ஒழுக்க சீலர்கள் எந்த வகையான உருட்டை வைக்கப்போகிறார்கள் என பார்க்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X