கோயில்களை இடித்து கடை கட்டி வாடகைக்கு விட முயற்சி | Dinamalar

கோயில்களை இடித்து கடை கட்டி வாடகைக்கு விட முயற்சி

Updated : செப் 20, 2022 | Added : செப் 20, 2022 | கருத்துகள் (20) | |
உசிலம்பட்டி : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய சந்தை திடலுக்குள் விநாயகர், இரகாமன் கோயில்களை இடித்து விட்டு 28 கடைகள் கட்டி வாடகைக்கு விடும் முயற்சியில் தி.மு.க., அ.தி.மு.க., கூட்டணி அமைத்துள்ளனர்.இங்கு நபார்டு நிதியுதவியுடன் 240 கடைகளும், ஊராட்சி நிர்வாகம் சார்பில் நுாற்றுக்கணக்கான கடைகளையும் தரை வாடகைக்கு விட்டுள்ளனர். தரைவாடகைக்கு பெற்றுள்ளவர்கள் கடைகள்
DMK, ADMK, கோயில், கடை, வாடகை,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


உசிலம்பட்டி : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய சந்தை திடலுக்குள் விநாயகர், இரகாமன் கோயில்களை இடித்து விட்டு 28 கடைகள் கட்டி வாடகைக்கு விடும் முயற்சியில் தி.மு.க., அ.தி.மு.க., கூட்டணி அமைத்துள்ளனர்.இங்கு நபார்டு நிதியுதவியுடன் 240 கடைகளும், ஊராட்சி நிர்வாகம் சார்பில் நுாற்றுக்கணக்கான கடைகளையும் தரை வாடகைக்கு விட்டுள்ளனர். தரைவாடகைக்கு பெற்றுள்ளவர்கள் கடைகள் கட்டி தனிநபர்களுக்கு கூடுதல் வாடகைக்கு விட்டுள்ளனர்.


latest tamil newsஇந்த கடைகளுக்கான வாடகையை சீரமைக்க நீதிமன்ற உத்தரவுபடி முதற்கட்டமாக நபார்டு நிதியுதவியுடன் கட்டப்பட்ட கடைகளுக்கு மட்டும் ஏலம் விட்டனர். ஏலம் எடுத்தவர்களுக்கு கடைகளை ஒதுக்கும் பணி நடந்து வருகிறது.இந்நிலையில், சந்தையில் உள்ள நுாலகத்தின் பின்புறம் இருந்த விநாயகர், இரகாமன் கோயில்களை இடித்து விட்டு 28 புதிய கடைகள் அமைக்கும் பணியில் தி.மு.க., ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ரஞ்சனியின் கணவர் சுதந்திரம், அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் பாண்டியம்மாள் கணவர் உக்கிரபாண்டியன் மற்றும் இரு கட்சிகளின் கவுன்சிலர்கள் ஈடுபட்டுள்ளனர்.ஊராட்சி ஒன்றிய கமிஷனர் பாண்டியிடம் கேட்டபோது, 'புதிதாக கடைகள் கட்ட எந்த அனுமதியும் கொடுக்கவில்லை. கட்டியுள்ள கடைகளை அப்புறப்படுத்தவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் போலீசில் புகார் தெரிவித்துள்ளேன்' என்றார். ஆனாலும் கடைகள் கட்டும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. தி.மு.க., அ.தி.மு.க., வினர் மீது நடவடிக்கை எடுக்க பா.ஜ., சார்பில் புகார் செய்யப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X